• Apr 28 2024

2023 IPL இன் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தான்!!

crownson / Dec 22nd 2022, 6:51 am
image

Advertisement

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுப்பதற்கு IPL அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

16 ஆவது IPL போட்டித் தொடர் அடுத்த 2023 நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ளது.

16ஆவது IPL தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ்இ ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 74 போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மீபகாலமாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களாலும்,  கிரிக்கெட் வல்லுனர்களாலும் அதிகம் கவனிக்கப்படும் வீரராக இருந்து வருகிறார்.

20 ஓவர் போட்டிகளில் 4 ஓவரை சிறப்பாக வீசுவதுடன், அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திறமை இவருக்கு உண்டு.

கேப்டனாக செயல்படும் திறமையும் பென் ஸ்டோக்கிற்கு உள்ளது.

அந்த வகையில் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.

இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அவர்களில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட அதிகபட்சமாக 87 வீரர்களை 10 அணிகள் ஏலத்தில் எடுக்க முடியும்.

கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்டோக்ஸ் விளையாடினார்.

அந்த அணி தற்போது ரூ. 13.2 கோடி மட்டுமே கைவசம் வைத்துள்ளது.

ரூ. 19.45 கோடி கைவசம் வைத்துள்ள டெல்லி அணி டேவிட் வார்னர், ஆன்ரிக் நோட்ஜ், லுங்கி நிகிடி உள்ளிட்ட வீரர்களை எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று RCB கொல்கத்தா அணிகளிடமும் போதிய தொகை இல்லை.

மும்பை அணிக்கு ஸ்பின்னர்கள் தேவை.

மொத்த பணத்தையும் பென் ஸ்டோக்ஸிற்காக செலவு செய்ய முடியாது.

குஜராத்திடம் ரூ. 19.25 கோடி உள்ளது. ஆனால் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா, தங்கள் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பஞ்சாப் அணியிடம் ரூ. 32.2 கோடியும், லக்னோவிடம் ரூ. 23.35 கோடியும், ஐதராபாத்திடம் ரூ. 42.25 கோடியும் உள்ளன.

தற்போதைய சூழலில் இந்த 3 அணிகளில் ஒன்று பென் ஸ்டாக்ஸை ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2023 IPL இன் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தான் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுப்பதற்கு IPL அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 16 ஆவது IPL போட்டித் தொடர் அடுத்த 2023 நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ளது.16ஆவது IPL தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ்இ ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.சமீபகாலமாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களாலும்,  கிரிக்கெட் வல்லுனர்களாலும் அதிகம் கவனிக்கப்படும் வீரராக இருந்து வருகிறார். 20 ஓவர் போட்டிகளில் 4 ஓவரை சிறப்பாக வீசுவதுடன், அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திறமை இவருக்கு உண்டு. கேப்டனாக செயல்படும் திறமையும் பென் ஸ்டோக்கிற்கு உள்ளது.அந்த வகையில் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் ஆர்வம் காட்டுகின்றன. இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட அதிகபட்சமாக 87 வீரர்களை 10 அணிகள் ஏலத்தில் எடுக்க முடியும்.கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்டோக்ஸ் விளையாடினார். அந்த அணி தற்போது ரூ. 13.2 கோடி மட்டுமே கைவசம் வைத்துள்ளது. ரூ. 19.45 கோடி கைவசம் வைத்துள்ள டெல்லி அணி டேவிட் வார்னர், ஆன்ரிக் நோட்ஜ், லுங்கி நிகிடி உள்ளிட்ட வீரர்களை எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோன்று RCB கொல்கத்தா அணிகளிடமும் போதிய தொகை இல்லை.மும்பை அணிக்கு ஸ்பின்னர்கள் தேவை. மொத்த பணத்தையும் பென் ஸ்டோக்ஸிற்காக செலவு செய்ய முடியாது. குஜராத்திடம் ரூ. 19.25 கோடி உள்ளது. ஆனால் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா, தங்கள் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.பஞ்சாப் அணியிடம் ரூ. 32.2 கோடியும், லக்னோவிடம் ரூ. 23.35 கோடியும், ஐதராபாத்திடம் ரூ. 42.25 கோடியும் உள்ளன. தற்போதைய சூழலில் இந்த 3 அணிகளில் ஒன்று பென் ஸ்டாக்ஸை ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement