• Nov 28 2024

பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Chithra / Mar 11th 2024, 2:13 pm
image

 

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்காவிட்டால், வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவை தொடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொத்த வியாபார சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை நேற்றையதினம் 580-600 ரூபா வரை அதிகரித்து, சில்லறை விலையாக 700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கையிருப்பில் உள்ளதாகவும், 

பாகிஸ்தானின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய இறக்குமதி நிறுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கொழும்பு வெங்காய இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்கள் ஆகியும், அதற்கு மாற்றாக பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, தற்போது அந்த நாட்டில் வெங்காய இருப்பு முடிவடைந்ததால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் பங்களாதேஷ் மற்றும் துபாய்க்கு இந்தியாவின் ஏற்றுமதி மாதத்திற்கு 50,000 மெட்ரிக் டொன்களாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று மொத்த விற்பனையாளர்கள் கோரிக்கையின் பேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி இலங்கை அரசாங்கமும் தலையிட்டு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க முடியும் எனவும், அரசாங்கத்திடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொழும்பு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை  அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இராஜதந்திர கோரிக்கை விடுக்காவிட்டால், வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவை தொடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மொத்த வியாபார சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை நேற்றையதினம் 580-600 ரூபா வரை அதிகரித்து, சில்லறை விலையாக 700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கையிருப்பில் உள்ளதாகவும், பாகிஸ்தானின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய இறக்குமதி நிறுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கொழும்பு வெங்காய இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில் இந்தியா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்கள் ஆகியும், அதற்கு மாற்றாக பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, தற்போது அந்த நாட்டில் வெங்காய இருப்பு முடிவடைந்ததால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.மேலும் பங்களாதேஷ் மற்றும் துபாய்க்கு இந்தியாவின் ஏற்றுமதி மாதத்திற்கு 50,000 மெட்ரிக் டொன்களாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று மொத்த விற்பனையாளர்கள் கோரிக்கையின் பேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதன்படி இலங்கை அரசாங்கமும் தலையிட்டு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க முடியும் எனவும், அரசாங்கத்திடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொழும்பு பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement