• Dec 14 2024

அம்பன் கிழக்கில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்...

Tharmini / Nov 2nd 2024, 3:29 pm
image

வடமராட்சி கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில், வடமராட்சி கிழக்கு, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர், பிரேம் பிரதம விருந்தினாராக கலந்துகொண்டு பனம் விதை நடுகைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் பொருளாளர் கி.விசிகரன், மற்றும் முன்னாள் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்து சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் கொட்டோடை கிராமத்தில் 10000 பயன்தரும் மரங்கள் நாட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






அம்பன் கிழக்கில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தங்கராசா கார்த்தீபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில், வடமராட்சி கிழக்கு, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர், பிரேம் பிரதம விருந்தினாராக கலந்துகொண்டு பனம் விதை நடுகைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் பொருளாளர் கி.விசிகரன், மற்றும் முன்னாள் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்து சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதேவேளை எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் கொட்டோடை கிராமத்தில் 10000 பயன்தரும் மரங்கள் நாட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement