• Apr 20 2024

கறுப்பு சுதந்திர தினம்: தமிழர்களின் வழியில் முக்கிய தரப்பு அதிரடி முடிவு!

Sharmi / Feb 1st 2023, 9:34 am
image

Advertisement

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள  நிலையில் பல்வேறு தரப்பினரும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறிப்பாக தமிழர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து புறக்கணிப்பதை போன்று வேடுவர்களும் இந்தச் சுதந்திரதினத்தை கறுப்புநாளாக அறிவித்துப் புறக்கணிக்க முடிவுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோ தெரிவித்ததாவது:-

இதுவரை காலமும் பதவி வகித்த அரசாங்கங்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை. எமது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு கூடைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறோம்.

முன்பு நாங்கள் சுதந்திரமாக காடு,மேடு எங்கும் சுற்றித்திரிந்தோம். தற்போது பதவிக்கு வரும் அரசாங்கங்கள் எமக் குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின் றன. சுதந்திரதின நிகழ்வுகளுக்கு மட்டும் நாங்கள் அழைக்கப்படுகிறோம்.

அதுவும் நிகழ்வுகளுக்கான யானைகளைத் தேடுவதற்காகவே அழைக்கப்படுகின் றோம். சுதந்திரதின நிகழ்வுகள் முடிவ டைந்ததும் நாங்கள் காடுகளுக்குத் திரும்பிவிடுவோம். அதன்பின்னர் அரசாங்கம் எம்மைப்பற்றி எதுவித கரிசனையும் செலுத்துவதில்லை.

எமக்கு எதுவுமே செய்வதில்லை. நாங்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறோமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது - என்றார்.



கறுப்பு சுதந்திர தினம்: தமிழர்களின் வழியில் முக்கிய தரப்பு அதிரடி முடிவு இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள  நிலையில் பல்வேறு தரப்பினரும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் குறிப்பாக தமிழர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து புறக்கணிப்பதை போன்று வேடுவர்களும் இந்தச் சுதந்திரதினத்தை கறுப்புநாளாக அறிவித்துப் புறக்கணிக்க முடிவுசெய்துள்ளனர்.இது தொடர்பில் வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோ தெரிவித்ததாவது:-இதுவரை காலமும் பதவி வகித்த அரசாங்கங்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை. எமது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு கூடைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறோம். முன்பு நாங்கள் சுதந்திரமாக காடு,மேடு எங்கும் சுற்றித்திரிந்தோம். தற்போது பதவிக்கு வரும் அரசாங்கங்கள் எமக் குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின் றன. சுதந்திரதின நிகழ்வுகளுக்கு மட்டும் நாங்கள் அழைக்கப்படுகிறோம். அதுவும் நிகழ்வுகளுக்கான யானைகளைத் தேடுவதற்காகவே அழைக்கப்படுகின் றோம். சுதந்திரதின நிகழ்வுகள் முடிவ டைந்ததும் நாங்கள் காடுகளுக்குத் திரும்பிவிடுவோம். அதன்பின்னர் அரசாங்கம் எம்மைப்பற்றி எதுவித கரிசனையும் செலுத்துவதில்லை. எமக்கு எதுவுமே செய்வதில்லை. நாங்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறோமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement