• May 19 2024

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் குவியும் சடலங்கள்! samugammedia

Chithra / Jun 1st 2023, 7:13 am
image

Advertisement

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத  37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களின் உரிமையாளர்கள் வந்து உரிமை கோரும் வரை ஒரு மாத காலம் குளிரூட்டியில் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவசர சிகிச்சைப்பிரிவு அல்லது வெளிநோயாளர் பிரிவுக்குள் வரும் நோயாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டாலும், உரிமையாளர்கள் முன்வராத சடலங்கள் ஒரு மாத இறுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அரச செலவில் புதைக்கப்படும் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

1990 சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் குவியும் சடலங்கள் samugammedia கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத  37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும் 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களின் உரிமையாளர்கள் வந்து உரிமை கோரும் வரை ஒரு மாத காலம் குளிரூட்டியில் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, அவசர சிகிச்சைப்பிரிவு அல்லது வெளிநோயாளர் பிரிவுக்குள் வரும் நோயாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டாலும், உரிமையாளர்கள் முன்வராத சடலங்கள் ஒரு மாத இறுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அரச செலவில் புதைக்கப்படும் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.1990 சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement