• May 04 2024

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் அதிகரிக்கும் லஞ்சம்- பொலிஸாரும் உடந்தை..!

Tamil nila / Apr 22nd 2024, 8:41 pm
image

Advertisement

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

வவுனியா குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்க காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழங்கமாக உள்ளது.

இதன் போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில் ரவுடிகள் போன்று செயற்படும் சிலர் ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு பணம் கொடுக்காமல் இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதோடு முரண்பாடான நிலைமைiயும் ஏற்படுகின்றது.

இதற்குமப்பால் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

எனவே வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் பணம் வாங்கி வரிசையில் இலக்கத்தினை பெற்றுகொடுக்கும் கும்பல் தினமும் பொலிஸார் பாத்திருக்க அதிகளவில் பணத்தினை சம்பாதித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செயற்பாட்டிற்கு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும் உடந்தையாக செயற்படுவதாகவும் கடவுச்சீட்டை பெற வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் அதிகரிக்கும் லஞ்சம்- பொலிஸாரும் உடந்தை. வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.வவுனியா குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்க காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழங்கமாக உள்ளது.இதன் போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில் ரவுடிகள் போன்று செயற்படும் சிலர் ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் அங்கு பணம் கொடுக்காமல் இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதோடு முரண்பாடான நிலைமைiயும் ஏற்படுகின்றது.இதற்குமப்பால் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.எனவே வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் பணம் வாங்கி வரிசையில் இலக்கத்தினை பெற்றுகொடுக்கும் கும்பல் தினமும் பொலிஸார் பாத்திருக்க அதிகளவில் பணத்தினை சம்பாதித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.இவ்வாறான செயற்பாட்டிற்கு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும் உடந்தையாக செயற்படுவதாகவும் கடவுச்சீட்டை பெற வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement