• May 17 2024

பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீனம்-இஸ்ரேலின் மோசமான நிலைக்கு காரணம்- டானியல் ஜெயரூபன்...!samugammedia

Sharmi / Oct 17th 2023, 5:14 pm
image

Advertisement

பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீன -இஸ்ரேலை இவ்வளவு மோசமான நிலைக்கு வருவதற்கு காரணம் என அருட்பணி டானியல் ஜெயரூபன் தெரிவித்தார்.

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி அணியின் ஏற்பாட்டில் சுண்டுக்குழி  புனித திருமுழுக்கு  யோவான்  ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீன -இஸ்ரேலை இவ்வளவு மோசமான நிலைக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு உரித்தானவர்கள் இஸ்ரேல்தான் என்பதை பிரித்தானியாதான் எழுதி வைத்துள்ளார்கள்.

ஐ.நா சபையிடம் நாம் ஒப்பீட்டு அடிப்படையில் எவ்விதத்தில் பொருத்தமா என கேள்வியெழுகிறது.

கிறீஸ்தவ அடிப்படை வாதத்தை நாம் சிறிது கேள்விக்குள்ளாக்கவேண்டும். யூடியூப்பில் இஸ்டேலை கடவுள் காப்பாற்றுவார் என குறிப்பிடுகின்றனர். அதேவேளை கிறீஸ்தவ மக்கள் இஸ்டேலுக்காக ஜெபம் பண்ணுங்கள். கடவுள் அவர்களை காப்பாற்றுவார் எனவும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாடு மிகவும் பிரச்சினைக்குரியது.

நாங்கள் பைபிளை கும்பிடுகின்றோமா அல்லது கடவுளை கும்பிடுகின்றோமா என கிறீஸ்தவர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

கடவுளின் விடுதலைப்பயணம் என்பது எல்லா கட்டத்திலும் அடிமைத்தனத்திலிருப்பவர்களுக்கு விடுதலைதான். அது  இஸ்டேலுக்கு மட்டும் பொருந்தாது.

எனவே கடவுளை விடுதலை சார்ந்த கடவுளாக பார்க்காது தனியே யூதர் மையமான கடவுளாகவோ அல்லது கிறீஸ்தவர்களை பாதுகாக்கின்ற கடவுளாகவோ பார்க்கும் பார்வை கோணம் பிழை. ஏழைகள

ஆகவே நாங்கள் திருச்சபையாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும்.

எனவே நாங்கள் பாரிய மாற்றங்களுக்கு போக வேண்டும். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டது என சொல்ல முடியாது.

தமிழ் மக்களின் போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது என்று ஒருவரும் கூறவில்லை. எல்லோரும் இலங்கையில் உரிமையோடு நீதியோடு வாழ்வதே அவசியம்.

சிங்கள மக்கள் எத்தனையோ பேர் தமிழர்கள் உரிமையோடு வாழவேண்டும் என ஆதரவு தருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீனம்-இஸ்ரேலின் மோசமான நிலைக்கு காரணம்- டானியல் ஜெயரூபன்.samugammedia பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீன -இஸ்ரேலை இவ்வளவு மோசமான நிலைக்கு வருவதற்கு காரணம் என அருட்பணி டானியல் ஜெயரூபன் தெரிவித்தார்.யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி அணியின் ஏற்பாட்டில் சுண்டுக்குழி  புனித திருமுழுக்கு  யோவான்  ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பிரித்தானியா செய்த கொடுமைதான் பாலஸ்தீன -இஸ்ரேலை இவ்வளவு மோசமான நிலைக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு உரித்தானவர்கள் இஸ்ரேல்தான் என்பதை பிரித்தானியாதான் எழுதி வைத்துள்ளார்கள்.ஐ.நா சபையிடம் நாம் ஒப்பீட்டு அடிப்படையில் எவ்விதத்தில் பொருத்தமா என கேள்வியெழுகிறது.கிறீஸ்தவ அடிப்படை வாதத்தை நாம் சிறிது கேள்விக்குள்ளாக்கவேண்டும். யூடியூப்பில் இஸ்டேலை கடவுள் காப்பாற்றுவார் என குறிப்பிடுகின்றனர். அதேவேளை கிறீஸ்தவ மக்கள் இஸ்டேலுக்காக ஜெபம் பண்ணுங்கள். கடவுள் அவர்களை காப்பாற்றுவார் எனவும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாடு மிகவும் பிரச்சினைக்குரியது.நாங்கள் பைபிளை கும்பிடுகின்றோமா அல்லது கடவுளை கும்பிடுகின்றோமா என கிறீஸ்தவர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.கடவுளின் விடுதலைப்பயணம் என்பது எல்லா கட்டத்திலும் அடிமைத்தனத்திலிருப்பவர்களுக்கு விடுதலைதான். அது  இஸ்டேலுக்கு மட்டும் பொருந்தாது.எனவே கடவுளை விடுதலை சார்ந்த கடவுளாக பார்க்காது தனியே யூதர் மையமான கடவுளாகவோ அல்லது கிறீஸ்தவர்களை பாதுகாக்கின்ற கடவுளாகவோ பார்க்கும் பார்வை கோணம் பிழை. ஏழைகளஆகவே நாங்கள் திருச்சபையாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும்.எனவே நாங்கள் பாரிய மாற்றங்களுக்கு போக வேண்டும். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டது என சொல்ல முடியாது.தமிழ் மக்களின் போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது என்று ஒருவரும் கூறவில்லை. எல்லோரும் இலங்கையில் உரிமையோடு நீதியோடு வாழ்வதே அவசியம்.சிங்கள மக்கள் எத்தனையோ பேர் தமிழர்கள் உரிமையோடு வாழவேண்டும் என ஆதரவு தருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement