• May 02 2024

பலத்த இடி மின்னலுடன் கனமழை! வடக்கு உட்பட 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை....! samugammedia

Chithra / Oct 17th 2023, 5:11 pm
image

Advertisement

 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (17) இரவு பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பின்படி, 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 06 மாவட்டங்களுக்கு ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதன்போது, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பலத்த இடி மின்னலுடன் கனமழை வடக்கு உட்பட 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. samugammedia  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (17) இரவு பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.வானிலை முன்னறிவிப்பின்படி, 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 06 மாவட்டங்களுக்கு ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.இதன்போது, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement