• May 21 2024

பலவந்தமாக காணிகளை கைப்பற்றிய பௌத்த மதகுரு..! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு samugammedia

Chithra / Nov 22nd 2023, 10:38 am
image

Advertisement

 

அனுராதபுரம் மாகோல்லாகம பிரதேசத்தில் சுமார் 4,500 ஏக்கர் காணியை பௌத்த மதகுரு ஒருவர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வலத்தவே ராகுல என்ற பௌத்த மதகுரு இவ்வாறு பலவந்தமாக காணியை கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாகோல்லாகம பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதி ஒன்றை இவ்வாறு குறித்த பௌத்த மதகுரு பலவந்தமாக கைப்பற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த காட்டுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் வன விலங்கு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானைகளுக்கு எதிரான வேலிகள் காரணமாக வனவிலங்குகள் மற்றும் பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாகவும் யானைகளை தடுக்கும் மின்சார வேலிகளை அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. 


பலவந்தமாக காணிகளை கைப்பற்றிய பௌத்த மதகுரு. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு samugammedia  அனுராதபுரம் மாகோல்லாகம பிரதேசத்தில் சுமார் 4,500 ஏக்கர் காணியை பௌத்த மதகுரு ஒருவர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வலத்தவே ராகுல என்ற பௌத்த மதகுரு இவ்வாறு பலவந்தமாக காணியை கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அனுராதபுரம் மாகோல்லாகம பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதி ஒன்றை இவ்வாறு குறித்த பௌத்த மதகுரு பலவந்தமாக கைப்பற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.இந்த காட்டுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் வன விலங்கு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானைகளுக்கு எதிரான வேலிகள் காரணமாக வனவிலங்குகள் மற்றும் பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாகவும் யானைகளை தடுக்கும் மின்சார வேலிகளை அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement