• May 17 2024

யாழில் அதிகரிக்கும் 'பல்ப்' திருடர்கள்..!

Chithra / Dec 23rd 2022, 11:41 am
image

Advertisement

யாழ்.வல்லை பகுதியில் வலி,கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோலார் மின் விளக்குகள் களவாடப்பட்டுள்ளது. 

மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபையினால் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது.

தற்போதைய சூழலில் ஒரு சோலார் மின் விளக்கின் பெறுமதி 2 லட்சம் ரூபாயாக உள்ளது. 

தொடர்ச்சியாககளவாடி வரும் நிலையில், வல்லை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினா், பொலிஸாா் கூட கண்காணித்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை என பிரதேசசபைகள் பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளன. 

அண்மையில் கரவெட்டி பிரதேசசபையினால் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் களவாடி செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடா்பாக வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளா் தியாகராஜா நிரோஷை தொடா்பு கொண்டு கேட்டபோது, 


நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றம் கணிசமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு விளக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறோம். அதனை அடியோடு வெட்டி எடுத்துச் செல்வது வேதனையான விடயம். 

பொதுமக்களின் நன்மை கருதி குறித்த மின் விளக்குகளை நாங்கள் பொருத்தினோம் ஆனால் பொதுமக்களே அவற்றை பாதுகாக்க தவறுகிறாா்கள். எனவே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சகல சோளாா் விளக்குகளையும் அகற்றி வேறு தேவையான இடங்களுக்கு பொருத்த தீா்மானித்துள்ளோம். 

பெருமளவு நிதியை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தை பாதுகாக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான கடமை. 

அதனை செய்யாதபோது மிச்சமாக உள்ளதையாவது பாதுகாத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வேறு இடங்களில் பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

யாழில் அதிகரிக்கும் 'பல்ப்' திருடர்கள். யாழ்.வல்லை பகுதியில் வலி,கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோலார் மின் விளக்குகள் களவாடப்பட்டுள்ளது. மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபையினால் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது.தற்போதைய சூழலில் ஒரு சோலார் மின் விளக்கின் பெறுமதி 2 லட்சம் ரூபாயாக உள்ளது. தொடர்ச்சியாககளவாடி வரும் நிலையில், வல்லை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினா், பொலிஸாா் கூட கண்காணித்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை என பிரதேசசபைகள் பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளன. அண்மையில் கரவெட்டி பிரதேசசபையினால் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் களவாடி செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடா்பாக வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளா் தியாகராஜா நிரோஷை தொடா்பு கொண்டு கேட்டபோது, நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றம் கணிசமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு விளக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறோம். அதனை அடியோடு வெட்டி எடுத்துச் செல்வது வேதனையான விடயம். பொதுமக்களின் நன்மை கருதி குறித்த மின் விளக்குகளை நாங்கள் பொருத்தினோம் ஆனால் பொதுமக்களே அவற்றை பாதுகாக்க தவறுகிறாா்கள். எனவே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சகல சோளாா் விளக்குகளையும் அகற்றி வேறு தேவையான இடங்களுக்கு பொருத்த தீா்மானித்துள்ளோம். பெருமளவு நிதியை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தை பாதுகாக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான கடமை. அதனை செய்யாதபோது மிச்சமாக உள்ளதையாவது பாதுகாத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வேறு இடங்களில் பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement