• Sep 19 2024

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம்!

Chithra / Jan 28th 2023, 10:18 am
image

Advertisement

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்பிற்கமையவே செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.குறித்த சட்டத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.13 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்பிற்கமையவே செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement