• Mar 18 2025

இதய நோயாளர்களுக்கான ஊசி மருந்து கொள்வனவு - அமைச்சரவை அனுமதி

Chithra / Mar 18th 2025, 1:24 pm
image


இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசி மருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு குறித்த ஒப்பந்ததை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தைக் கொண்ட 6,000 குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. 

அதற்காகஇ 03 விலைமனுக்கள் கிடைத்துள்ளன என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

இதேவேளை அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடிய உயரிய தரத்துடன் கூடிய கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


இதய நோயாளர்களுக்கான ஊசி மருந்து கொள்வனவு - அமைச்சரவை அனுமதி இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசி மருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு குறித்த ஒப்பந்ததை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தைக் கொண்ட 6,000 குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காகஇ 03 விலைமனுக்கள் கிடைத்துள்ளன என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.இதேவேளை அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடிய உயரிய தரத்துடன் கூடிய கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement