• May 11 2024

உள்ளுராட்சி சபைகளை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துமாறு கபே அமைப்பு கோரிக்கை!

Chithra / Jan 29th 2023, 3:31 pm
image

Advertisement

நடக்கவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலினை சுதந்திரமாகவும், நீதியானதுமான முறையில் நடத்த உள்ளுராட்சிமன்றங்களினை உடனடியாக கலைக்க வேண்டும் என கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மஹின் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர்  குறிப்பிடுகையில்,

கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பானது நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலிற்காக தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்து அது தொடர்பான செயற்பாடுகளினை  மக்களை மத்தியில் முன்னெடுத்து வருகின்றது. 

அந்த அடிப்படையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்க கூடிய அரசியல் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்திருந்தோம். 

தேர்தலினை நாங்கள்  இம் முறை பார்க்கும் பொழுது பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்  இதுவரை இடம்பெற்றதாகவே உள்ளது. ஒவ்வொரு உள்ளுராட்சிமன்ற தேர்தலாயினும், ஏனைய தேர்தலாயினும் இடம்பெறுவது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் போது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தினத்தினை அறிவித்ததிலிருந்து கட்சிகள், அமைச்சர்கள், சுயேட்சைக்குழுக்களும் பிரசாரத்தை முன்னெடுப்பது  வழமை. 

தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்துகின்ற காலம் நிறைவிற்கு வந்துள்ளது, கையொப்பமிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதும் நிறைவிற்கு வந்துள்ளது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்தல் 9 மார்ச் ஆம் திகதி இடம்பெறுமென அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயினும், இந்த தேர்தலிலே போட்டியிடுகின்ற அபேச்சகர்கள் மத்தியில் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற ஐயம் நிலவுகின்றது. இவ் ஊடகவியலார் சந்திப்பு இடம்பெறும்வரையில்  தேர்தலினை பிற்போடுவதற்காக 19 தடை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் பிரதானமான விடயமே தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்துவது இடம்பெறுகின்றது. 

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 80,000 ற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதனை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்களாக களமிறங்கியுள்ளனர்.

ஆனாலும், கடந்த காலங்களிலே ஒன்றாகவிருந்த பல பிரதான காட்சிகள் வெவ்வேறாக தனியாகவும், கூட்டாகவும் இணைந்து தேர்தலிலே போட்டியிடும் சந்தர்ப்பத்தை காண முடிகின்றது. அதே போன்று ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு காட்சிகளாக பிரிந்து போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ள தேர்தலாக இதை பார்க்கின்றோம். 


இவ்வாறிருக்க  தேர்தலிலே அபேட்சர்கள்  அதிகரிக்கின்ற பொழுதும், பல கட்சிகள்  போட்டியிடும் பொழுது இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலிலே வன்முறைகள் இடம்பெறும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. 

எனவே, ஒவ்வொரு அபேட்சகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமும் கஃபே அமைப்பு வேண்டுகொள்வது யாதெனில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்ற தேர்தலினை வன்முறைகளற்ற, சமாதானமான தேர்தலாக இடம்பெற  ஒன்றுபட வேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.

இன்னுமொரு முக்கிய விடயம் உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படாத நிலையில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கலைக்கப்படாமல் இருக்கின்ற பொழுது தற்போதுள்ள தவிசாளர், உபதவிசாளர், ஏனைய உறுப்பினர்களால்   உள்ளுராட்சிமன்றங்களிற்கு சொந்தமான சொத்துக்களை பயன்படுத்தி தமது தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்க ஏதுவாக அமையும். 

குறிப்பாக  உள்ளுராட்சிமன்றங்களிற்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்த ஏதுவாக அமைத்தல்,

வாக்காளருக்கு லஞ்சம் வழங்கும் வாய்ப்பு, அரச உத்தியோகத்தர்களான கிராமகசேவகர், அபிவிருத்தி உத்தியாகத்தர்களினை  தேர்தல் பிரசார நடவடிக்கையிற்காக பயன்படுத்த கூடிய நிலை இருப்பதால் கஃபே  அமைப்பு உள்ளுராட்சி அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றது அனைத்து உள்ளுராட்சிமன்றங்களையும் உடனடியாக ஆணையாளர்களிற்கு அதிகாரங்களினை வழங்க கூடிய ரீதியில் கட்டுப்பாட்டினை வழங்க வேண்டும்.

குறிப்பாக நடைபெறவிருக்கும் தேர்தலினை பார்க்கின்ற பொழுது இதுவரை காலம் வரைக்கும் தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மூலமும் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படாமல் இருப்பது சுதந்திரமானதும், நீதியானதும் தேர்தலினை நடத்த முடியாத சூழலை கட்டாயம்  ஏற்படுத்தும்.

எனவே உடனடியாக உள்ளுராட்சிமன்றங்களினை களைத்து தேர்தலினை சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்த  அனைத்து கட்சிகளிற்கும், சுயேச்சைக்குழுக்களுக்கும் சம அளவிலான சூழலை பெற்றுக்கொடுக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துமாறு கபே அமைப்பு கோரிக்கை நடக்கவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலினை சுதந்திரமாகவும், நீதியானதுமான முறையில் நடத்த உள்ளுராட்சிமன்றங்களினை உடனடியாக கலைக்க வேண்டும் என கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மஹின் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்  குறிப்பிடுகையில்,கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பானது நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலிற்காக தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்து அது தொடர்பான செயற்பாடுகளினை  மக்களை மத்தியில் முன்னெடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்க கூடிய அரசியல் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்திருந்தோம். தேர்தலினை நாங்கள்  இம் முறை பார்க்கும் பொழுது பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்  இதுவரை இடம்பெற்றதாகவே உள்ளது. ஒவ்வொரு உள்ளுராட்சிமன்ற தேர்தலாயினும், ஏனைய தேர்தலாயினும் இடம்பெறுவது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் போது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தினத்தினை அறிவித்ததிலிருந்து கட்சிகள், அமைச்சர்கள், சுயேட்சைக்குழுக்களும் பிரசாரத்தை முன்னெடுப்பது  வழமை. தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்துகின்ற காலம் நிறைவிற்கு வந்துள்ளது, கையொப்பமிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதும் நிறைவிற்கு வந்துள்ளது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்தல் 9 மார்ச் ஆம் திகதி இடம்பெறுமென அறிவுறுத்தியுள்ளனர்.ஆயினும், இந்த தேர்தலிலே போட்டியிடுகின்ற அபேச்சகர்கள் மத்தியில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற ஐயம் நிலவுகின்றது. இவ் ஊடகவியலார் சந்திப்பு இடம்பெறும்வரையில்  தேர்தலினை பிற்போடுவதற்காக 19 தடை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் பிரதானமான விடயமே தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்துவது இடம்பெறுகின்றது. நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 80,000 ற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதனை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்களாக களமிறங்கியுள்ளனர்.ஆனாலும், கடந்த காலங்களிலே ஒன்றாகவிருந்த பல பிரதான காட்சிகள் வெவ்வேறாக தனியாகவும், கூட்டாகவும் இணைந்து தேர்தலிலே போட்டியிடும் சந்தர்ப்பத்தை காண முடிகின்றது. அதே போன்று ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு காட்சிகளாக பிரிந்து போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ள தேர்தலாக இதை பார்க்கின்றோம். இவ்வாறிருக்க  தேர்தலிலே அபேட்சர்கள்  அதிகரிக்கின்ற பொழுதும், பல கட்சிகள்  போட்டியிடும் பொழுது இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலிலே வன்முறைகள் இடம்பெறும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே, ஒவ்வொரு அபேட்சகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமும் கஃபே அமைப்பு வேண்டுகொள்வது யாதெனில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்ற தேர்தலினை வன்முறைகளற்ற, சமாதானமான தேர்தலாக இடம்பெற  ஒன்றுபட வேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.இன்னுமொரு முக்கிய விடயம் உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படாத நிலையில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கலைக்கப்படாமல் இருக்கின்ற பொழுது தற்போதுள்ள தவிசாளர், உபதவிசாளர், ஏனைய உறுப்பினர்களால்   உள்ளுராட்சிமன்றங்களிற்கு சொந்தமான சொத்துக்களை பயன்படுத்தி தமது தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்க ஏதுவாக அமையும். குறிப்பாக  உள்ளுராட்சிமன்றங்களிற்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்த ஏதுவாக அமைத்தல்,வாக்காளருக்கு லஞ்சம் வழங்கும் வாய்ப்பு, அரச உத்தியோகத்தர்களான கிராமகசேவகர், அபிவிருத்தி உத்தியாகத்தர்களினை  தேர்தல் பிரசார நடவடிக்கையிற்காக பயன்படுத்த கூடிய நிலை இருப்பதால் கஃபே  அமைப்பு உள்ளுராட்சி அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றது அனைத்து உள்ளுராட்சிமன்றங்களையும் உடனடியாக ஆணையாளர்களிற்கு அதிகாரங்களினை வழங்க கூடிய ரீதியில் கட்டுப்பாட்டினை வழங்க வேண்டும்.குறிப்பாக நடைபெறவிருக்கும் தேர்தலினை பார்க்கின்ற பொழுது இதுவரை காலம் வரைக்கும் தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மூலமும் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படாமல் இருப்பது சுதந்திரமானதும், நீதியானதும் தேர்தலினை நடத்த முடியாத சூழலை கட்டாயம்  ஏற்படுத்தும்.எனவே உடனடியாக உள்ளுராட்சிமன்றங்களினை களைத்து தேர்தலினை சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்த  அனைத்து கட்சிகளிற்கும், சுயேச்சைக்குழுக்களுக்கும் சம அளவிலான சூழலை பெற்றுக்கொடுக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement