யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் இன்று கையளிக்கப்பட்டது.
இன்றையதினம் போதானா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது "கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த இயந்திரம் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சகயகத்தை பார்வையிட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தினுள் நினைவுச் சின்னமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேற்படி இதய அதிர்வு இயந்திரம் உதவியுடன் நோயாளர்களுக்கு இதய சத்திர சிகிச்சையினை வழங்க முடியும்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் இன்று கையளிக்கப்பட்டது.இன்றையதினம் போதானா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது "கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த இயந்திரம் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சகயகத்தை பார்வையிட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தினுள் நினைவுச் சின்னமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.மேற்படி இதய அதிர்வு இயந்திரம் உதவியுடன் நோயாளர்களுக்கு இதய சத்திர சிகிச்சையினை வழங்க முடியும்.