• May 21 2024

இரத்து செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / May 29th 2023, 8:57 am
image

Advertisement

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த, இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளதாக தெரிவித்தார்.

தற்சமயம் அனுமதிப்பத்திரத்தை கொண்டு அதிக வயதான சாரதிகள் அந்த அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத் தேவையில்லாத அனைத்து வகையான அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த பருவத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அட்டைகள் இல்லாத காரணத்தினால், தற்போது சுமார் 08 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


இரத்து செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள். விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு samugammedia காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த, இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளதாக தெரிவித்தார்.தற்சமயம் அனுமதிப்பத்திரத்தை கொண்டு அதிக வயதான சாரதிகள் அந்த அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.புதுப்பிக்கத் தேவையில்லாத அனைத்து வகையான அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு அறிவிக்கப்பட்டது.எவ்வாறாயினும், கடந்த பருவத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அட்டைகள் இல்லாத காரணத்தினால், தற்போது சுமார் 08 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement