• May 02 2024

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கமுடியாது..! காரணத்தை வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக்க..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 2:02 pm
image

Advertisement

நாடாளுமன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்; தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனவே தற்போது காணப்படும் சட்டமூலத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

எமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம், சொத்துக்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதே போன்று இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.எனினும் இது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளும் இந்த சட்ட மூலத்தில் இல்லை. எமது நிலைப்பாட்டை நாம் அறிவித்திருக்கின்றோம்.

இந்த சட்ட மூலம் முழுமையானதல்ல. எனவே தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்தார்.

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கமுடியாது. காரணத்தை வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக்க.samugammedia நாடாளுமன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்; தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனவே தற்போது காணப்படும் சட்டமூலத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது.எமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம், சொத்துக்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.அதே போன்று இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.எனினும் இது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளும் இந்த சட்ட மூலத்தில் இல்லை. எமது நிலைப்பாட்டை நாம் அறிவித்திருக்கின்றோம்.இந்த சட்ட மூலம் முழுமையானதல்ல. எனவே தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement