• Apr 25 2024

இலங்கையிலிருந்து இனி இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாதா? வெளியான தகவல்!

Tamil nila / Dec 4th 2022, 6:50 pm
image

Advertisement

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள  வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்  உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


'இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, எவ்வித யோசனைகளுமின்றி இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தைகளையுடைய தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.


மந்தபோசனையால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று அதிகளவு பேசப்படுகின்றது.


அவ்வாறு இருக்கும் போது, தாயின் உடற்சூடு தேவைப்படும் இரண்டு வயது குழந்தையை விட்டு விட்டு தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், மந்தபோசனைப் பிரச்சினைக்கு மேலாக உளநல பாதிப்பை உடைய சமூகமே உருவாகும். சிறுவர்களே நாட்டின் எதிர்காலம். சிறுவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது சிறந்ததல்ல. சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு எனக்கு கையளிக்கப்பட்டபோது நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறினார்.


இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளைப் பார்க்கும் போது, அந்தச் சமூகப் பிரச்சினைக்குக் காரணமான சிறுவர்களின் பெற்றோர் வெளிநாடுகளில் வாழ்ந்த தரப்பினராக இருப்பர். எனவே, அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. சிறுவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இனி இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாதா வெளியான தகவல் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள  வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்  உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.'இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, எவ்வித யோசனைகளுமின்றி இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தைகளையுடைய தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.மந்தபோசனையால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று அதிகளவு பேசப்படுகின்றது.அவ்வாறு இருக்கும் போது, தாயின் உடற்சூடு தேவைப்படும் இரண்டு வயது குழந்தையை விட்டு விட்டு தாய்மாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், மந்தபோசனைப் பிரச்சினைக்கு மேலாக உளநல பாதிப்பை உடைய சமூகமே உருவாகும். சிறுவர்களே நாட்டின் எதிர்காலம். சிறுவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது சிறந்ததல்ல. சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு எனக்கு கையளிக்கப்பட்டபோது நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறினார்.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளைப் பார்க்கும் போது, அந்தச் சமூகப் பிரச்சினைக்குக் காரணமான சிறுவர்களின் பெற்றோர் வெளிநாடுகளில் வாழ்ந்த தரப்பினராக இருப்பர். எனவே, அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. சிறுவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement