• May 17 2024

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Sharmi / Jan 20th 2023, 3:26 pm
image

Advertisement

சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் தாங்கள் முன்வைத்துள்ள பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான மேலதிக ஆவணங்களை சமர்பிப்பதற்கு முடிந்தால் திகதியை வழங்குமாறு பிரதிவாதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை பெப்ரவரி 21-ம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய சதொச ஊழியர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெராட் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கு தொடர்பில் தாங்கள் முன்வைத்துள்ள பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான மேலதிக ஆவணங்களை சமர்பிப்பதற்கு முடிந்தால் திகதியை வழங்குமாறு பிரதிவாதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை பெப்ரவரி 21-ம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய சதொச ஊழியர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெராட் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement