• Nov 28 2024

என் பதவியேற்பை தடுத்தால் வழக்கு...! - நாசவேலைகளை செய்யவேண்டாம் என தயாசிறி எச்சரிக்கை!

Chithra / Jul 5th 2024, 8:28 am
image

 

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வழமையான பொதுச் செயலாளராக செயற்படும் உரிமையில் தலையிட வேண்டாம் என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர  கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்த அவர், 

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.

எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல, அந்த இடத்திற்கும் வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் மற்றும் மருதானை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் அனைவரையும் மரியாதையுடன் அழைக்கின்றோம் என தெரிவித்த ஜெயசேகர, எவரும் எதற்கும் பயப்பட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

என் பதவியேற்பை தடுத்தால் வழக்கு. - நாசவேலைகளை செய்யவேண்டாம் என தயாசிறி எச்சரிக்கை  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வழமையான பொதுச் செயலாளராக செயற்படும் உரிமையில் தலையிட வேண்டாம் என  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர  கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இன்றைய தினம் டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல, அந்த இடத்திற்கும் வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் மற்றும் மருதானை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்தார்.இந்த நிகழ்விற்கு வருகை தருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் அனைவரையும் மரியாதையுடன் அழைக்கின்றோம் என தெரிவித்த ஜெயசேகர, எவரும் எதற்கும் பயப்பட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement