• Sep 19 2024

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுதமுனையில் பணம் கொள்ளை

Chithra / Sep 15th 2024, 3:10 pm
image

Advertisement


புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கைத்துப்பாக்கியை காண்பித்து இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று (15) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர்,

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து சுமார் 207,500 ரூபாவை கொள்ளைடித்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் தொடுவாவ பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை அடுத்து, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமராக்களை பரிசோதனை செய்து, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுதமுனையில் பணம் கொள்ளை புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கைத்துப்பாக்கியை காண்பித்து இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று (15) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர்,எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து சுமார் 207,500 ரூபாவை கொள்ளைடித்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் தொடுவாவ பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டினை அடுத்து, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமராக்களை பரிசோதனை செய்து, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement