• May 19 2024

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க களமிறங்கும் பிரபலங்கள்! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 12:08 pm
image

Advertisement

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது

இது விடயம் சம்பந்தமாக கொழும்பில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவண்ண, நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அவ்வேளையிலேயே முதலாவது கூட்டத்தை ஜனவரி 19 ஆம் திகதி நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டுள்ளது.

அதுவரை புதிய அரசியல் கூட்டணி குறித்து கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக  ஜனாதிபதி தேர்தல் 2024 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க களமிறங்கும் பிரபலங்கள் samugammedia அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றதுஇது விடயம் சம்பந்தமாக கொழும்பில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவண்ண, நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதன்போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அவ்வேளையிலேயே முதலாவது கூட்டத்தை ஜனவரி 19 ஆம் திகதி நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டுள்ளது.அதுவரை புதிய அரசியல் கூட்டணி குறித்து கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.குறிப்பாக  ஜனாதிபதி தேர்தல் 2024 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement