• Apr 16 2024

மன்னாரில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 12:30 pm
image

Advertisement

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு    கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு   கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச் செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் SamugamMedia இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு    கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு   கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச் செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement