• May 17 2024

அரச மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு- இலங்கை மின்சார சபை எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Jul 8th 2023, 7:34 am
image

Advertisement

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார அறிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலை மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த மின் கட்டண நிலுவைத் தொகை மூன்று பில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண நிலுவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் நாடு முழுவதும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நானூறுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் காணப்படுவதாகவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் 13.5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு நிதி அமைச்சிடம் இருந்து அறுபத்தேழு பில்லியன் ரூபா சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் சுகாதார அமைச்சுக்கு போதிய பணம் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை என்ன செய்வது என்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன்  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெவிரித்துள்ளார்.     

அரச மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு- இலங்கை மின்சார சபை எச்சரிக்கை samugammedia சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார அறிவித்துள்ளது.அத்துடன் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலை மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த மின் கட்டண நிலுவைத் தொகை மூன்று பில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் கட்டண நிலுவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இருப்பினும் நாடு முழுவதும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நானூறுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் காணப்படுவதாகவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் 13.5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு நிதி அமைச்சிடம் இருந்து அறுபத்தேழு பில்லியன் ரூபா சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.இருப்பினும் சுகாதார அமைச்சுக்கு போதிய பணம் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை என்ன செய்வது என்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன்  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெவிரித்துள்ளார்.     

Advertisement

Advertisement

Advertisement