இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
அத்துடன், இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி. அதன் ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிளாச்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜக்கெட் ஒன்றும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, கொழும்பு நகரை அண்மித்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் திறந்துவைத்துள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்த இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர்samugammedia இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.அத்துடன், இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி. அதன் ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.பிளாச்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜக்கெட் ஒன்றும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை, கொழும்பு நகரை அண்மித்து நிர்மாணிக்கப்பட்ட மூன்று ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் திறந்துவைத்துள்ளார்.