• Mar 12 2025

சமல் ராஜபக்ச உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கமாட்டார்: டி.வி. சானக உறுதி..!

Sharmi / Mar 12th 2025, 2:44 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் டி.வி.சானக எம்.பி  கருத்து தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நகைச்சுவைக்காகவே சமல் ராஜபக்ச அப்படியொரு தகவலை வெளியிட்டார். 

அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார். நகைச்சுவையாக கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா? எனவும் தெரிவித்தார்.

சமல் ராஜபக்ச உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கமாட்டார்: டி.வி. சானக உறுதி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் இது தொடர்பில் டி.வி.சானக எம்.பி  கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நகைச்சுவைக்காகவே சமல் ராஜபக்ச அப்படியொரு தகவலை வெளியிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார். நகைச்சுவையாக கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement