• Nov 06 2024

வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு- ரிசாத் நம்பிக்கை..!

Sharmi / Nov 6th 2024, 1:12 pm
image

Advertisement

வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று(06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீழ்ந்து கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியமைப்பதற்கும் அதன் வருவாயை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கும் ஆற்றல் அனுபவம் மற்றும் திறமையுள்ள பல பாராளுமன்ற வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலே போட்டியிடுகின்றனர். 

இத்தேர்தலிலே ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறுகின்ற போது இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் அதனை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்தார்.



வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு- ரிசாத் நம்பிக்கை. வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியாவில் இன்று(06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வீழ்ந்து கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியமைப்பதற்கும் அதன் வருவாயை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கும் ஆற்றல் அனுபவம் மற்றும் திறமையுள்ள பல பாராளுமன்ற வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலே போட்டியிடுகின்றனர். இத்தேர்தலிலே ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறுகின்ற போது இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வன்னி மாவட்டத்திலே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் அதனை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement