• May 19 2024

இலங்கையில் டின்மீன் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

Chithra / Jan 25th 2023, 1:19 pm
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான விஷேட சரக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் டின் மீன் கைத்தொழிலை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளுர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க ஆகியோர் விசேட வர்த்தகப் பொருட்களின் விலையை 100 ரூபாவில் இருந்து 200 ரூபாவாக அதிகரிக்க செயற்பட்டுள்ளனர்.

சுற்றுலா மற்றும் மீன்பிடி தொழில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்றும், மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகளை அரசு வழங்கினால், மீன்பிடி தொழில் மூலம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் திறன் நாட்டுக்கு உள்ளது என்றார்.

நாளாந்தம் 3 இலட்சத்துக்கும் அதிகமான டின் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தற்போது சந்தையில் ஒரு டின்மீன் 450-470 ரூபாவாக உள்ளதாகவும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் குறையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் டின்மீன் விலையில் ஏற்பட்ட மாற்றம் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான விஷேட சரக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் டின் மீன் கைத்தொழிலை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளுர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்தார்.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க ஆகியோர் விசேட வர்த்தகப் பொருட்களின் விலையை 100 ரூபாவில் இருந்து 200 ரூபாவாக அதிகரிக்க செயற்பட்டுள்ளனர்.சுற்றுலா மற்றும் மீன்பிடி தொழில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்றும், மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகளை அரசு வழங்கினால், மீன்பிடி தொழில் மூலம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் திறன் நாட்டுக்கு உள்ளது என்றார்.நாளாந்தம் 3 இலட்சத்துக்கும் அதிகமான டின் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தற்போது சந்தையில் ஒரு டின்மீன் 450-470 ரூபாவாக உள்ளதாகவும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் குறையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement