• Jan 20 2025

எதிர்காலத்தில் அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு வந்த அறிவிப்பு

Chithra / Jan 20th 2025, 10:58 am
image


எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்தார்.  

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை இந்த ஆண்டு மகா பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், 

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் அறிவிக்காததால் தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மகா பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்குக் குறைந்தபட்சம் 140 ரூபாய் உத்தரவாத விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் செங்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. 

மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


எதிர்காலத்தில் அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு வந்த அறிவிப்பு எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்தார்.  அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை இந்த ஆண்டு மகா பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் அறிவிக்காததால் தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மகா பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்குக் குறைந்தபட்சம் 140 ரூபாய் உத்தரவாத விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் செங்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement