• May 17 2024

சனல் 4 தொலைக்காட்சியின் விரும்பத்திற்கு ஆட முடியாது..! ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து! - மகிந்த காட்டம் samugammedia

Chithra / Oct 4th 2023, 3:15 pm
image

Advertisement

 

சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது சரியான விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களிடம் கோபமாகவும் காரசாரமாகவும் பேசியவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் இன்று ரணிலும் அவ்வாறான ஒரு இடத்திற்கு சென்றிருப்பது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என ஊடகவிலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்தவர், அப்படி தான் செய்ய வேண்டும். அது தான் சரியான விடயம். செனல் 4 தொலைகாட்சிக்கு விரும்பியது போன்று இங்கு ஆட முடியாது என மகிந்த பதிலளித்துள்ளார்.

அத்துடன் சமூக ஊடகங்களை முடக்குவது தொடர்பில் அவரிடம் தகவல் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் சமூக ஊடகங்களை முடக்க முடியாது. அதற்கு யாரும் ஆதரவளிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் எப்போதும் மக்கள் பக்கமே உள்ளோம். மேலும் மின்சார நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. அதற்கு விரைவில் பதில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து மகிந்தவிடம் வினவிய போது, நான் ஆட்சி அமைத்தவரை போதும் என நினைக்கிறேன். இனி புதிய தலைமைத்துவங்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியின் விரும்பத்திற்கு ஆட முடியாது. ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து - மகிந்த காட்டம் samugammedia  சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது சரியான விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று  இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகங்களிடம் கோபமாகவும் காரசாரமாகவும் பேசியவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் இன்று ரணிலும் அவ்வாறான ஒரு இடத்திற்கு சென்றிருப்பது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என ஊடகவிலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு பதிலளித்தவர், அப்படி தான் செய்ய வேண்டும். அது தான் சரியான விடயம். செனல் 4 தொலைகாட்சிக்கு விரும்பியது போன்று இங்கு ஆட முடியாது என மகிந்த பதிலளித்துள்ளார்.அத்துடன் சமூக ஊடகங்களை முடக்குவது தொடர்பில் அவரிடம் தகவல் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் சமூக ஊடகங்களை முடக்க முடியாது. அதற்கு யாரும் ஆதரவளிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் எப்போதும் மக்கள் பக்கமே உள்ளோம். மேலும் மின்சார நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. அதற்கு விரைவில் பதில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து மகிந்தவிடம் வினவிய போது, நான் ஆட்சி அமைத்தவரை போதும் என நினைக்கிறேன். இனி புதிய தலைமைத்துவங்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement