• May 19 2024

ETF – EPF தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை - சபையில் வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 4th 2023, 2:43 pm
image

Advertisement

 

 

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மூன்று விதிமுறைகள் மற்றும் சிறப்புப் பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஈபிஎப் நிதியின் சுயாதீன முகாமைத்துவம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரு தரப்பும் தான் சொல்வது சரி என்கிறீர்கள். அப்படியானால் இரு தரப்பினரும் ஏன் இணைந்து செயல்பட முடியாது?” என்று ஜனாதிபதி இதன்போது கேட்டிருந்தையும் குறிப்பிடத்தக்கது.


ETF – EPF தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை - சபையில் வெளியான தகவல் samugammedia   ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மூன்று விதிமுறைகள் மற்றும் சிறப்புப் பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஈபிஎப் நிதியின் சுயாதீன முகாமைத்துவம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.“இரு தரப்பும் தான் சொல்வது சரி என்கிறீர்கள். அப்படியானால் இரு தரப்பினரும் ஏன் இணைந்து செயல்பட முடியாது” என்று ஜனாதிபதி இதன்போது கேட்டிருந்தையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement