• May 17 2024

சனல்4 ஆவணப்படம்...!நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்...! சிறிநேசன் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 2:45 pm
image

Advertisement

சனல்4 வெளியிட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை நடாத்தி உயிர்த்த ஞாயிறு படுகொலை மற்றும் அரசியல்,ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவை வலியுறுத்தப்பட்டன.

இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளருமான ஞா.சிறிநேசன்,

தற்போது பரபரப்பான ஒரு செய்தி ஓட்டத்தை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக உண்மையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று நாங்கள் சந்தேகிக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது.

அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவமாக பலத்த சந்தேகங்கள் பல பக்கமும் காணப்பட்டது.  ஆனால் அந்த சந்தேகங்களை களைய கூடிய வகையில் சந்தேகப்பட்ட விடயங்கள் உண்மைதான் என பல கருத்துக்கள் இப்போது சேனல் 4 மூலமாக வெளிவந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக கூறப்போனால் அந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம் பெற்ற பின்னர் கதைக்கப்பட்ட கதைகளும் இப்போது கதைக்கப்படும் கதைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றது பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அந்த நேரத்தில் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாததன் காரணத்தினால் தான் இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றது என்கின்ற அடிப்படையில் அவருடைய சிந்தனை வேறு போக்காக காணப்பட்டது.

இப்போது குறிப்பாக முன்னாள் சட்டமா அதிபர் ரிவேரா அவர்கள் அவர் முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றார். அதாவது ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்ட விடையங்களில் சில விடயங்கள் மறைக்கப்பட்ட இருப்பதாக கூறி இருக்கின்றார் அந்த கருத்தின் பின்னர் பேராயர் அவர்கள் தன்னுடைய எண்ணம் சிந்தனைகளை மாற்றி இருக்கின்றார்.

அதன் பின்னர் தான் ஆட்சி மாற்றத்திற்கான அதிகார மாற்றத்திற்கான ஒரு சதித்திட்டம் தான் இது என்பதனை பேராயர் பல இடங்களில் கூறியிருக்கின்றார் அதேவேளை எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார, மனுஷ நாணயக்கார ஆளும் கட்சியில் இருப்பவர் அதே போன்று ஹரின் பெராண்டோ ஆளும் கட்சியில் இருப்பவர் அதாவது இது ஒரு உளவுத்துறையோடு சம்பந்தப்பட்ட சதி முயற்சி என்றும் அந்த உளவுத்துறை சார்ந்த அதிகாரியின் பெயரைக் கூட அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள் ஆகவே இந்த விடயத்தோடு எமது மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரு சதி முயற்சி செய்யப்பட்டது என்கின்ற விடயம் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த இடத்தில் கேட்கின்ற முக்கியமான கேள்வி என்னவென்றால் சிறைக்கூடம் என்பது உண்மையில் சந்தேக நபர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களை நல்வழிப்படுத்துகின்ற விடயமாக இருக்க வேண்டியதே தவிர அந்த சிறைச்சாலை என்பது மீண்டும் ஒரு குற்றச் செயலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுகின்ற ஒரு கேந்திர நிலையமாக அமையக்கூடாது.

இதில் நேர்மையாக பணியாற்றுகின்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒரு நாளும் குறை கூறவில்லை ஆனால் அரசியல் அழுத்தத்தின் காரணமாக இந்த சிறைச்சாலை ஏதோ ஒரு சதித்திட்டத்திற்குரிய மையப் புள்ளியாக இருந்திருக்கின்றது என்கின்ற சந்திக்கக்கூடிய நிலைமை இருக்கின்றது ஏனென்றால் பிரபலியமாக பேசப்படுகின்ற ஹன்ஸின் முகமத் எனப்படுகின்ற அசாத் மௌலானா அவர்களுடைய கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதை விட தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய கருத்துக்கள் எமது மத தலைவர்கள் கூறிய கருத்துக்கள் அதிலும் குறிப்பாக சிறுகாமினி எனப்படுகின்ற அருட்தந்தை அவர் குறிப்பிட்ட கருத்து ஒரு பக்கம் இருக்க நலின் பண்டார கூறிய கருத்து இருக்கின்றது.

இன்றைய கருத்து ஒன்று இருக்கின்றது பாராளுமன்றத்தில் பேசியது சரத் பொன்சேக்கா கூறி இருக்கின்றார் குறிப்பிட்ட அந்த ராணுவ அதிகாரி ராஜபக்ச குடும்பத்தில் ஒரு காவலன் எனக் கூறியிருக்கின்றார் இந்த இடத்தில் நாங்கள் ஒட்டுமொத்தமாக புரட்டிப் பார்க்கின்றபோது இதில் ஒரு உண்மை தெரிகின்றது என்னவென்றால் சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது என்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

இதில் ஒரு நல்ல விடயம் நடந்திருக்கிறது என்னவென்றால் நீதி அமைச்சர் கூறி இருக்கின்றார். இதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று அதேபோன்று நலின் பண்டார கூறி இருக்கின்றார் சர்வதேச விசாரணை வேண்டுமென்று மனுஷ நாணயக்கார சர்வதேச விசாரணை வேண்டுமென்று கூறியிருக்கின்றார் அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயலாளர் கூட சர்வதேச விசாரணை வேண்டுமென்று.

அதனை விட சந்திரகாந்தன் அவர்கள் கூறுகின்றார் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அசாத் மௌலானாவும் விசாரிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார் இப்போது ஆளும் தரப்பு எதிர் தரப்பு சர்வதேசம் தரப்பு எல்லோரும் இணைந்து ஒரு கருத்தை கூறுகின்றார்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கட்டாயம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றார்கள்.

இதில் இன்னமும் தெளிவுபடுத்த வேண்டிய விடயம் என்னவென்றால் வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெறுகின்ற போது அங்கு தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் இந்துக்கள் அழிக்கப்பட்டார்கள் அடுத்த கட்டமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பார்க்கும்போது அங்கு கிறிஸ்தவ சிங்களவர்கள் கிறிஸ்தவ தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்தப் பாதிப்பின் அடுத்த எதிரொலி சஹ்ரான் ஒரு அம்பாக பாவிக்கப்பட்டிருக்கின்றார்.

சஹ்ரான் குழுவினர் சாவதற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள் இறந்தால் தங்களுக்கு மோட்சம் கிடைக்கும் மோட்ச வாசலில் தங்களை வரவேற்பதற்காக 75 கன்னிப்பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் என்ற கருத்தினை கூறியிருந்தார்கள் அந்த ஒரு கற்பனையில் அவர்கள் சாவதற்கு தயாராக இருந்தார்கள்.

இந்த பயன்படுத்தியவர்கள் யார் என்பதனை தான் அசாத் மௌலானா அவர்கள் மிகவும் சேனல் 4 ஊடாக மிகவும் அப்பட்டமாக கூறி இருக்கின்றார் ஆகவே நாங்கள் இவற்றை ஒரு கட்டுக் கதையாக கூற முடியாது.

யுத்தத்தின் மூலமாக தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அடுத்ததாக சிங்கள கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பாதிப்புக்கு உட்படாமல் இருக்கின்றவர்கள் யாரேனும் பார்க்கின்ற போது சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் அவர்கள் விட்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என கூறவில்லை ஆகவே இங்கு ஒரு அடிப்படை வாதம் காணப்படுகின்றது குறிப்பிட்ட ஒரு மதத்தவர் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மாத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் பாதிக்கப்படலாம் என்கின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதில் சிங்கள கிறிஸ்தவர்கள் கூட விதிவிலக்கல்ல அவர்களை கூட தாக்கி இருக்கின்றார்கள் எனவே இந்த விடயங்களை பார்க்கின்றபோது 269 நபர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இந்த தாக்குதலில் இதில் 43 பேர் உல்லாச பயணிகள் அவ்வாறாயின் இது ஒரு சர்வதேச குற்றமாக மாறுகின்றது.

இப்போது இருக்கின்ற உள்நாட்டு குற்றவாளிகள் மாத்திரம் அல்ல சர்வதேச குற்றங்களுக்கு உள்ளான நிகழ்ச்சி நிரலுக்கு சென்று இருக்கின்றது.

எனவே சர்வதேச நீதிமன்றங்களில் கூட வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை அரவினமான செயற்பாடுகள் செய்திருக்கின்றது என்பதனை நாங்கள் மறக்கக்கூடாது தனிப்பட்ட முறையில் எமக்கு கோபதாபங்கள் இல்லை கட்சி அரசியல் என்பது வேறு பக்கம் ஆனால் அப்பாவி மக்களை அதிகார மாற்றத்திற்காக ஒரு அரசியல் மாற்றத்திற்காக பலி கொடுத்திருக்கின்றோம் என்பதுதான் ஒரு அபத்தமான செயலாக அமைந்திருக்கின்றது.

உண்மை என்பது செத்துப் போகாது உண்மை உறங்கலாம் அது விழித்துக் கொள்ளும் ஆகவே இவ்வளவு காலமும் அனைவரும் நினைத்தது உண்மைகள் உறங்கி விட்டதா செத்துவிட்டதா என நினைத்தார்கள் ஏனென்றால் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பாக 14 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நான்கு ஆண்டுகளுக்குள் சர்வதேச விசாரணை என்கின்ற நிலைக்கு சென்று இருக்கின்றது ஏதோ ஒரு கதவு திறக்கட்டும் அந்த கதவுக்கு உள்ளாக அந்த பிரச்சினைகளும் உள்ளாக செல்ல வேண்டும் என்பதனை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கக் கூடிய தலைவர்கள் இருக்க வேண்டும் ஜனநாயக மயப்படுத்தப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஊடக சுதந்திரத்தை மறுக்கின்றார்கள் அதாவது ஊடகவியலாளர்கள் தங்களுக்கு துதி பாடக்கூடியவர்கள் அல்லது தங்களை அஞ்சக்கூடியவர்கள் தான் தங்களுடைய அபிவிருத்தி கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு வரையறையினை போடுகின்றார்கள்.

ஆகவே ஜனநாயக மயப்படுத்தப்படாத தலைவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி அறியாத தலைவர்கள் ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகார கண்ணோட்டத்தோடு கொண்டு செல்கின்ற ஒரு பாணியை கையாளுகின்றார்கள்.

இப்போது விளங்க வேண்டும் எஜமானர்கள் ஏவி விட்டால் ஏவலாளிகள் கூரையை பிரிக்கலாம் அல்லது குண்டு வைக்கலாம் என்கின்ற கலாசாரத்தில் இருந்து இப்போது திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது சொந்த மூளையினை பயன்படுத்த வேண்டும் யார் கொல்லப்பட போகின்றார்கள் நாங்கள் போடுகின்ற திட்டம் சரியா என்று சிந்திக்க வேண்டும்.

இன்னும் ஒரு விடயம் சட்டத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது நிர்வாக துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது ஊடகத்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும் நீதித்துறையும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் இன்று நீதித்துறை கூட அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற செய்திகளை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக சொல்லக்கூடியது இலங்கை இன்று 75 ஆண்டுகளாக ஒற்றை ஆட்சி முறையின் கீழ் இனவாத ஆட்சியின் கீழ் மதவாத ஆட்சியின் கீழ் மிகவும் மோசமான ஒரு பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்திருக்கின்றது இதிலிருந்து மீட்சி பெறுவதாயின் இனப்பிரச்சனைக்கான தீர்வு கண்டறியப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தராதரம் பார்க்காமல் நீதியும் முன் நிறுத்தப்பட வேண்டும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பட வேண்டும்அவர்கள் பெரியவர்கள் இவர்கள் சிறியவர்கள் என்கின்ற கருத்து இல்லை ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மறைந்து கிடக்கின்ற உண்மைகள் வழியில் வரவேண்டும் அதற்கான நீதியில் வெளியில் வரும் போது தான் உண்மையான ஜனநாயகத்தையும் உண்மையான மனித உரிமைகளையும் காண முடியும்.

தனிப்பட்ட முறையில் பிள்ளையானுடனோ வியாழேந்திரனுடனோ எங்களுக்கு பிரச்சனை இல்லை அவர்கள் அவர்களுடைய அரசியலை செய்கின்றார்கள் நாங்கள் எங்களுடைய அரசியலை செய்கின்றோம்.  ஆனால் ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புவேன் குற்றம் செய்யக் கூடியவர்கள் அதிகளவு பொய்யும் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

குற்றம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்காக வடிகட்டிய பொய்களை கூறியவர்களாக இருப்பார்கள் அந்த வகையில் எப்போதும் குற்றம் செய்தவர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக் கொள்வதில்லை மகாத்மா காந்தியை போன்று அனைவரும் இருப்பதில்லை ஆகவே இயன்றவரை தக்க அடிப்படையில் சட்ட அடிப்படையில் தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்கு அவர்கள் செய்வது அவர்களது உரிமை.

ஆனால் இந்த விடயம் பலத்த சந்தேகம் மதத் தலைவர்கள் சந்தேகத்திருக்கின்றார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சந்தேகப்பட்டு இருக்கின்றார்கள் எல்லோரது சந்தேகமும் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என கூறினார்கள் ஆனால் சேனல் 4 செய்தி வெளிவந்ததன் பின்னர் பலரும் சந்தேகித்தது சரி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிலைமை வந்திருக்கிறது.

ஆனால் இப்போதும் கூட சரி என்று சொல்லவில்லை சர்வதேச விசாரணை அதாவது பாராபட்சம் இல்லாத நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்படுகின்ற போது அவர்கள் முறைப்படி செய்யலாம் அரசின் தளத்தில் இருப்பவர்கள் அதிகார பணத்தில் இருப்பவர்கள் எதையும் மறைக்கலாம் எப்படியும் அவர்கள் முறைப்பாடு செய்யலாம் ஆனால் சர்வதேச விசாரணை நீதியாக நடைபெறுகின்ற போது ஒவ்வொருவரது முகத்திரைகளும் கிழிக்கப்படும் அங்கு இருக்கின்ற விகாரமான முகங்கள் வெளியில் தெரியும். சாதாரணமாக பார்க்கின்ற முகங்களை விட கொடூரமான முகங்கள் மறைந்து இருக்கின்றன என்னால் வெளியும் வரக்கூடியதாக இருக்கும்.

உண்மையில் நீதித்துறை நீதிமன்றங்கள் நீதிபதிகளை பற்றி விமர்சிக்க கூடாது என்கின்ற வரையறைகள் வரம்புகள் இருக்கின்றன பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமைகளை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் அந்த விடயங்களை பேசக்கூடிய நிலைமை இருக்கின்றது.

சட்டத்துறை, நிறைவேற்று துறை என்பது அரசாங்கம் சார்ந்தது நீதித்துறை என்பது சுதந்திரமான மனித உரிமைகளை பாதுகாக்கின்ற ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கின்ற ஒரு துறை அந்த துறைக்குள் அரசியல் அழுத்தகங்கள் பிரயோகிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஏனென்றால் அக்குபேரி ஆணிவேராக நான் சொல்ல முடியும் நான் அவற்றை கேட்ட நான் பார்த்த நான் ஒவ்வொரு செய்திகளையும் இரண்டு மூன்று தடவைகள் புரட்டிப் பார்ப்பது உண்டு சகல ஒளிப்பதிவுகளையும் நான் பார்த்தேன் பல சந்தேகங்கள் இருக்கின்றது.

அரசியல் அதிகாரங்கள் அரசியல் அழுத்தங்கள் அல்லது அரசியல் ரீதியான பக்க சார்புகளை ஏற்படுத்துவதற்கு சுதந்திரமான துறைகளையும் இவர்கள் பலாத்காரப் படுத்துகின்றார்களா என்கின்ற கேள்வி ஏற்பட்டிருக்கின்றது எனவே சர்வதேச விசாரணை வரும்போது இதன் உண்மைகள் வெளியில் வரக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி என்பவர் உண்மையில் ஆதரவு தளம் இல்லாமல் பாராளுமன்றத்தில் ஒற்றை மரமாக அல்லது பக்கத்தில் இரண்டு மரங்களோடு இருக்கின்றவர்தான் ஜனாதிபதி ஜனாதிபதி இந்த விடயத்தில் சில வேளைகளில் இந்த விடயம் சர்வதேச மையப்படுத்தப்படுவதை உண்மையில் நான் நினைக்கின்றேன் ஜனாதி விரும்புவார் என நினைக்கின்றேன்.

ஏனென்றால் அவர் மேலைத்தேய ஜனநாயக அரசியலோடு சம்பந்தப்பட்ட ஒருவர் ஆனால் அதனை வெளிப்படையாக செய்வார் என நான் நம்பவில்லை ஆகவே தனக்கு இருக்கின்ற தலையிடையே போவதற்கு கூட சிலருடைய குற்றங்கள் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கலாம் அதனை நான் வெளிப்படையாக அவருடைய மனதில் என்ன இருக்கின்றது என்பது தெரியாது.

ஆனால் அவர் கூறியிருக்கின்றார் சனல்4  என்பது ஒரு நாடகம் என்று கூறி இருக்கின்றார்.  ஆனால் அப்படி பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றார் அரசாங்க பொறுப்பு இல்லை எனக் கூறியிருக்கின்றார்.

சனல்4 பற்றிய விடயங்கள் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பதில் கொடுக்கலாம் அரசாங்கம் அதற்கு பொறுப்பாக எடுக்க முடியாது என்ற கருத்தை கூறி இருக்கின்றார் ஆகவே தனிப்பட்டவர்கள் தான் முன்னாள் ஜனாதிபதியும் ஒரு தனிப்பட்டவராக தான் கருதப்படுகின்றார் இங்கு இருக்கின்ற ராஜாங்க அமைச்சரும் ஒரு தனிப்பட்டவராக தான் கருதப்படுகின்றார்.

இன்று இனத்தை அழித்தவர்களுக்காக அளிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக வந்தவர்கள் என்று கூறியவர் இன்று ராஜாங்க அமைச்சராக இருக்கின்றார் கிறிஸ்தவ தேவாலயங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இந்த நேரத்தில் ஒரு ராஜாங்க அமைச்சர் கூறினார் உங்களுக்கு தெரியும் அவர் இப்போது கிறிஸ்தவ தேவாலயத்தை பற்றியோ அல்லது அந்த மக்களின் அளிப்பை பற்றியோ பேசாமல் இருக்கின்றார்.

பதவி பெரிதா அல்லது மக்களின் உரிமை பெரிதா என்ற விடயத்தில் வெளிப்படையாக இங்கு இருக்கின்ற அடுத்த ராஜாங்க அமைச்சரும் தன்னுடைய கருத்தை கூற வேண்டும்

சனல்4 ஆவணப்படம்.நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். சிறிநேசன் வேண்டுகோள்.samugammedia சனல்4 வெளியிட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை நடாத்தி உயிர்த்த ஞாயிறு படுகொலை மற்றும் அரசியல்,ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவை வலியுறுத்தப்பட்டன.இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளருமான ஞா.சிறிநேசன்,தற்போது பரபரப்பான ஒரு செய்தி ஓட்டத்தை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக உண்மையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று நாங்கள் சந்தேகிக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது.அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவமாக பலத்த சந்தேகங்கள் பல பக்கமும் காணப்பட்டது.  ஆனால் அந்த சந்தேகங்களை களைய கூடிய வகையில் சந்தேகப்பட்ட விடயங்கள் உண்மைதான் என பல கருத்துக்கள் இப்போது சேனல் 4 மூலமாக வெளிவந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.குறிப்பாக கூறப்போனால் அந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம் பெற்ற பின்னர் கதைக்கப்பட்ட கதைகளும் இப்போது கதைக்கப்படும் கதைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றது பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அந்த நேரத்தில் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாததன் காரணத்தினால் தான் இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றது என்கின்ற அடிப்படையில் அவருடைய சிந்தனை வேறு போக்காக காணப்பட்டது.இப்போது குறிப்பாக முன்னாள் சட்டமா அதிபர் ரிவேரா அவர்கள் அவர் முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றார். அதாவது ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்ட விடையங்களில் சில விடயங்கள் மறைக்கப்பட்ட இருப்பதாக கூறி இருக்கின்றார் அந்த கருத்தின் பின்னர் பேராயர் அவர்கள் தன்னுடைய எண்ணம் சிந்தனைகளை மாற்றி இருக்கின்றார்.அதன் பின்னர் தான் ஆட்சி மாற்றத்திற்கான அதிகார மாற்றத்திற்கான ஒரு சதித்திட்டம் தான் இது என்பதனை பேராயர் பல இடங்களில் கூறியிருக்கின்றார் அதேவேளை எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார, மனுஷ நாணயக்கார ஆளும் கட்சியில் இருப்பவர் அதே போன்று ஹரின் பெராண்டோ ஆளும் கட்சியில் இருப்பவர் அதாவது இது ஒரு உளவுத்துறையோடு சம்பந்தப்பட்ட சதி முயற்சி என்றும் அந்த உளவுத்துறை சார்ந்த அதிகாரியின் பெயரைக் கூட அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள் ஆகவே இந்த விடயத்தோடு எமது மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரு சதி முயற்சி செய்யப்பட்டது என்கின்ற விடயம் கூறப்பட்டிருக்கின்றது.இந்த இடத்தில் கேட்கின்ற முக்கியமான கேள்வி என்னவென்றால் சிறைக்கூடம் என்பது உண்மையில் சந்தேக நபர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களை நல்வழிப்படுத்துகின்ற விடயமாக இருக்க வேண்டியதே தவிர அந்த சிறைச்சாலை என்பது மீண்டும் ஒரு குற்றச் செயலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுகின்ற ஒரு கேந்திர நிலையமாக அமையக்கூடாது.இதில் நேர்மையாக பணியாற்றுகின்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒரு நாளும் குறை கூறவில்லை ஆனால் அரசியல் அழுத்தத்தின் காரணமாக இந்த சிறைச்சாலை ஏதோ ஒரு சதித்திட்டத்திற்குரிய மையப் புள்ளியாக இருந்திருக்கின்றது என்கின்ற சந்திக்கக்கூடிய நிலைமை இருக்கின்றது ஏனென்றால் பிரபலியமாக பேசப்படுகின்ற ஹன்ஸின் முகமத் எனப்படுகின்ற அசாத் மௌலானா அவர்களுடைய கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதை விட தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய கருத்துக்கள் எமது மத தலைவர்கள் கூறிய கருத்துக்கள் அதிலும் குறிப்பாக சிறுகாமினி எனப்படுகின்ற அருட்தந்தை அவர் குறிப்பிட்ட கருத்து ஒரு பக்கம் இருக்க நலின் பண்டார கூறிய கருத்து இருக்கின்றது.இன்றைய கருத்து ஒன்று இருக்கின்றது பாராளுமன்றத்தில் பேசியது சரத் பொன்சேக்கா கூறி இருக்கின்றார் குறிப்பிட்ட அந்த ராணுவ அதிகாரி ராஜபக்ச குடும்பத்தில் ஒரு காவலன் எனக் கூறியிருக்கின்றார் இந்த இடத்தில் நாங்கள் ஒட்டுமொத்தமாக புரட்டிப் பார்க்கின்றபோது இதில் ஒரு உண்மை தெரிகின்றது என்னவென்றால் சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது என்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.இதில் ஒரு நல்ல விடயம் நடந்திருக்கிறது என்னவென்றால் நீதி அமைச்சர் கூறி இருக்கின்றார். இதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று அதேபோன்று நலின் பண்டார கூறி இருக்கின்றார் சர்வதேச விசாரணை வேண்டுமென்று மனுஷ நாணயக்கார சர்வதேச விசாரணை வேண்டுமென்று கூறியிருக்கின்றார் அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயலாளர் கூட சர்வதேச விசாரணை வேண்டுமென்று.அதனை விட சந்திரகாந்தன் அவர்கள் கூறுகின்றார் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அசாத் மௌலானாவும் விசாரிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார் இப்போது ஆளும் தரப்பு எதிர் தரப்பு சர்வதேசம் தரப்பு எல்லோரும் இணைந்து ஒரு கருத்தை கூறுகின்றார்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கட்டாயம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றார்கள்.இதில் இன்னமும் தெளிவுபடுத்த வேண்டிய விடயம் என்னவென்றால் வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெறுகின்ற போது அங்கு தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் இந்துக்கள் அழிக்கப்பட்டார்கள் அடுத்த கட்டமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பார்க்கும்போது அங்கு கிறிஸ்தவ சிங்களவர்கள் கிறிஸ்தவ தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்தப் பாதிப்பின் அடுத்த எதிரொலி சஹ்ரான் ஒரு அம்பாக பாவிக்கப்பட்டிருக்கின்றார்.சஹ்ரான் குழுவினர் சாவதற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள் இறந்தால் தங்களுக்கு மோட்சம் கிடைக்கும் மோட்ச வாசலில் தங்களை வரவேற்பதற்காக 75 கன்னிப்பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் என்ற கருத்தினை கூறியிருந்தார்கள் அந்த ஒரு கற்பனையில் அவர்கள் சாவதற்கு தயாராக இருந்தார்கள்.இந்த பயன்படுத்தியவர்கள் யார் என்பதனை தான் அசாத் மௌலானா அவர்கள் மிகவும் சேனல் 4 ஊடாக மிகவும் அப்பட்டமாக கூறி இருக்கின்றார் ஆகவே நாங்கள் இவற்றை ஒரு கட்டுக் கதையாக கூற முடியாது.யுத்தத்தின் மூலமாக தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அடுத்ததாக சிங்கள கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.பாதிப்புக்கு உட்படாமல் இருக்கின்றவர்கள் யாரேனும் பார்க்கின்ற போது சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் அவர்கள் விட்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என கூறவில்லை ஆகவே இங்கு ஒரு அடிப்படை வாதம் காணப்படுகின்றது குறிப்பிட்ட ஒரு மதத்தவர் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மாத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் பாதிக்கப்படலாம் என்கின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.இதில் சிங்கள கிறிஸ்தவர்கள் கூட விதிவிலக்கல்ல அவர்களை கூட தாக்கி இருக்கின்றார்கள் எனவே இந்த விடயங்களை பார்க்கின்றபோது 269 நபர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இந்த தாக்குதலில் இதில் 43 பேர் உல்லாச பயணிகள் அவ்வாறாயின் இது ஒரு சர்வதேச குற்றமாக மாறுகின்றது.இப்போது இருக்கின்ற உள்நாட்டு குற்றவாளிகள் மாத்திரம் அல்ல சர்வதேச குற்றங்களுக்கு உள்ளான நிகழ்ச்சி நிரலுக்கு சென்று இருக்கின்றது.எனவே சர்வதேச நீதிமன்றங்களில் கூட வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை அரவினமான செயற்பாடுகள் செய்திருக்கின்றது என்பதனை நாங்கள் மறக்கக்கூடாது தனிப்பட்ட முறையில் எமக்கு கோபதாபங்கள் இல்லை கட்சி அரசியல் என்பது வேறு பக்கம் ஆனால் அப்பாவி மக்களை அதிகார மாற்றத்திற்காக ஒரு அரசியல் மாற்றத்திற்காக பலி கொடுத்திருக்கின்றோம் என்பதுதான் ஒரு அபத்தமான செயலாக அமைந்திருக்கின்றது.உண்மை என்பது செத்துப் போகாது உண்மை உறங்கலாம் அது விழித்துக் கொள்ளும் ஆகவே இவ்வளவு காலமும் அனைவரும் நினைத்தது உண்மைகள் உறங்கி விட்டதா செத்துவிட்டதா என நினைத்தார்கள் ஏனென்றால் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பாக 14 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நான்கு ஆண்டுகளுக்குள் சர்வதேச விசாரணை என்கின்ற நிலைக்கு சென்று இருக்கின்றது ஏதோ ஒரு கதவு திறக்கட்டும் அந்த கதவுக்கு உள்ளாக அந்த பிரச்சினைகளும் உள்ளாக செல்ல வேண்டும் என்பதனை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கக் கூடிய தலைவர்கள் இருக்க வேண்டும் ஜனநாயக மயப்படுத்தப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஊடக சுதந்திரத்தை மறுக்கின்றார்கள் அதாவது ஊடகவியலாளர்கள் தங்களுக்கு துதி பாடக்கூடியவர்கள் அல்லது தங்களை அஞ்சக்கூடியவர்கள் தான் தங்களுடைய அபிவிருத்தி கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு வரையறையினை போடுகின்றார்கள்.ஆகவே ஜனநாயக மயப்படுத்தப்படாத தலைவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி அறியாத தலைவர்கள் ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகார கண்ணோட்டத்தோடு கொண்டு செல்கின்ற ஒரு பாணியை கையாளுகின்றார்கள்.இப்போது விளங்க வேண்டும் எஜமானர்கள் ஏவி விட்டால் ஏவலாளிகள் கூரையை பிரிக்கலாம் அல்லது குண்டு வைக்கலாம் என்கின்ற கலாசாரத்தில் இருந்து இப்போது திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது சொந்த மூளையினை பயன்படுத்த வேண்டும் யார் கொல்லப்பட போகின்றார்கள் நாங்கள் போடுகின்ற திட்டம் சரியா என்று சிந்திக்க வேண்டும்.இன்னும் ஒரு விடயம் சட்டத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது நிர்வாக துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது ஊடகத்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும் நீதித்துறையும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் இன்று நீதித்துறை கூட அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற செய்திகளை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.எனவே ஒட்டுமொத்தமாக சொல்லக்கூடியது இலங்கை இன்று 75 ஆண்டுகளாக ஒற்றை ஆட்சி முறையின் கீழ் இனவாத ஆட்சியின் கீழ் மதவாத ஆட்சியின் கீழ் மிகவும் மோசமான ஒரு பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்திருக்கின்றது இதிலிருந்து மீட்சி பெறுவதாயின் இனப்பிரச்சனைக்கான தீர்வு கண்டறியப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தராதரம் பார்க்காமல் நீதியும் முன் நிறுத்தப்பட வேண்டும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப்பட வேண்டும்அவர்கள் பெரியவர்கள் இவர்கள் சிறியவர்கள் என்கின்ற கருத்து இல்லை ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மறைந்து கிடக்கின்ற உண்மைகள் வழியில் வரவேண்டும் அதற்கான நீதியில் வெளியில் வரும் போது தான் உண்மையான ஜனநாயகத்தையும் உண்மையான மனித உரிமைகளையும் காண முடியும்.தனிப்பட்ட முறையில் பிள்ளையானுடனோ வியாழேந்திரனுடனோ எங்களுக்கு பிரச்சனை இல்லை அவர்கள் அவர்களுடைய அரசியலை செய்கின்றார்கள் நாங்கள் எங்களுடைய அரசியலை செய்கின்றோம்.  ஆனால் ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புவேன் குற்றம் செய்யக் கூடியவர்கள் அதிகளவு பொய்யும் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.குற்றம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்காக வடிகட்டிய பொய்களை கூறியவர்களாக இருப்பார்கள் அந்த வகையில் எப்போதும் குற்றம் செய்தவர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக் கொள்வதில்லை மகாத்மா காந்தியை போன்று அனைவரும் இருப்பதில்லை ஆகவே இயன்றவரை தக்க அடிப்படையில் சட்ட அடிப்படையில் தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்கு அவர்கள் செய்வது அவர்களது உரிமை.ஆனால் இந்த விடயம் பலத்த சந்தேகம் மதத் தலைவர்கள் சந்தேகத்திருக்கின்றார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சந்தேகப்பட்டு இருக்கின்றார்கள் எல்லோரது சந்தேகமும் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என கூறினார்கள் ஆனால் சேனல் 4 செய்தி வெளிவந்ததன் பின்னர் பலரும் சந்தேகித்தது சரி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிலைமை வந்திருக்கிறது.ஆனால் இப்போதும் கூட சரி என்று சொல்லவில்லை சர்வதேச விசாரணை அதாவது பாராபட்சம் இல்லாத நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்படுகின்ற போது அவர்கள் முறைப்படி செய்யலாம் அரசின் தளத்தில் இருப்பவர்கள் அதிகார பணத்தில் இருப்பவர்கள் எதையும் மறைக்கலாம் எப்படியும் அவர்கள் முறைப்பாடு செய்யலாம் ஆனால் சர்வதேச விசாரணை நீதியாக நடைபெறுகின்ற போது ஒவ்வொருவரது முகத்திரைகளும் கிழிக்கப்படும் அங்கு இருக்கின்ற விகாரமான முகங்கள் வெளியில் தெரியும். சாதாரணமாக பார்க்கின்ற முகங்களை விட கொடூரமான முகங்கள் மறைந்து இருக்கின்றன என்னால் வெளியும் வரக்கூடியதாக இருக்கும்.உண்மையில் நீதித்துறை நீதிமன்றங்கள் நீதிபதிகளை பற்றி விமர்சிக்க கூடாது என்கின்ற வரையறைகள் வரம்புகள் இருக்கின்றன பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமைகளை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் அந்த விடயங்களை பேசக்கூடிய நிலைமை இருக்கின்றது.சட்டத்துறை, நிறைவேற்று துறை என்பது அரசாங்கம் சார்ந்தது நீதித்துறை என்பது சுதந்திரமான மனித உரிமைகளை பாதுகாக்கின்ற ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கின்ற ஒரு துறை அந்த துறைக்குள் அரசியல் அழுத்தகங்கள் பிரயோகிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.ஏனென்றால் அக்குபேரி ஆணிவேராக நான் சொல்ல முடியும் நான் அவற்றை கேட்ட நான் பார்த்த நான் ஒவ்வொரு செய்திகளையும் இரண்டு மூன்று தடவைகள் புரட்டிப் பார்ப்பது உண்டு சகல ஒளிப்பதிவுகளையும் நான் பார்த்தேன் பல சந்தேகங்கள் இருக்கின்றது.அரசியல் அதிகாரங்கள் அரசியல் அழுத்தங்கள் அல்லது அரசியல் ரீதியான பக்க சார்புகளை ஏற்படுத்துவதற்கு சுதந்திரமான துறைகளையும் இவர்கள் பலாத்காரப் படுத்துகின்றார்களா என்கின்ற கேள்வி ஏற்பட்டிருக்கின்றது எனவே சர்வதேச விசாரணை வரும்போது இதன் உண்மைகள் வெளியில் வரக்கூடியதாக இருக்கும்.ஜனாதிபதி என்பவர் உண்மையில் ஆதரவு தளம் இல்லாமல் பாராளுமன்றத்தில் ஒற்றை மரமாக அல்லது பக்கத்தில் இரண்டு மரங்களோடு இருக்கின்றவர்தான் ஜனாதிபதி ஜனாதிபதி இந்த விடயத்தில் சில வேளைகளில் இந்த விடயம் சர்வதேச மையப்படுத்தப்படுவதை உண்மையில் நான் நினைக்கின்றேன் ஜனாதி விரும்புவார் என நினைக்கின்றேன்.ஏனென்றால் அவர் மேலைத்தேய ஜனநாயக அரசியலோடு சம்பந்தப்பட்ட ஒருவர் ஆனால் அதனை வெளிப்படையாக செய்வார் என நான் நம்பவில்லை ஆகவே தனக்கு இருக்கின்ற தலையிடையே போவதற்கு கூட சிலருடைய குற்றங்கள் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கலாம் அதனை நான் வெளிப்படையாக அவருடைய மனதில் என்ன இருக்கின்றது என்பது தெரியாது.ஆனால் அவர் கூறியிருக்கின்றார் சனல்4  என்பது ஒரு நாடகம் என்று கூறி இருக்கின்றார்.  ஆனால் அப்படி பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றார் அரசாங்க பொறுப்பு இல்லை எனக் கூறியிருக்கின்றார்.சனல்4 பற்றிய விடயங்கள் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பதில் கொடுக்கலாம் அரசாங்கம் அதற்கு பொறுப்பாக எடுக்க முடியாது என்ற கருத்தை கூறி இருக்கின்றார் ஆகவே தனிப்பட்டவர்கள் தான் முன்னாள் ஜனாதிபதியும் ஒரு தனிப்பட்டவராக தான் கருதப்படுகின்றார் இங்கு இருக்கின்ற ராஜாங்க அமைச்சரும் ஒரு தனிப்பட்டவராக தான் கருதப்படுகின்றார்.இன்று இனத்தை அழித்தவர்களுக்காக அளிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக வந்தவர்கள் என்று கூறியவர் இன்று ராஜாங்க அமைச்சராக இருக்கின்றார் கிறிஸ்தவ தேவாலயங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இந்த நேரத்தில் ஒரு ராஜாங்க அமைச்சர் கூறினார் உங்களுக்கு தெரியும் அவர் இப்போது கிறிஸ்தவ தேவாலயத்தை பற்றியோ அல்லது அந்த மக்களின் அளிப்பை பற்றியோ பேசாமல் இருக்கின்றார்.பதவி பெரிதா அல்லது மக்களின் உரிமை பெரிதா என்ற விடயத்தில் வெளிப்படையாக இங்கு இருக்கின்ற அடுத்த ராஜாங்க அமைச்சரும் தன்னுடைய கருத்தை கூற வேண்டும்

Advertisement

Advertisement

Advertisement