• May 18 2024

பிள்ளையான் தொடர்பில் சாணக்கியன் வெளிப்படுத்திய சர்ச்சை குரல் பதிவு - நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்..! samugammedia

Chithra / Sep 8th 2023, 2:38 pm
image

Advertisement

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருப்பின் அதனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 ஆவணப்படத்தின் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானாவின் குரல் பதிவு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய தினம் நாடாளுமன்றில் வெளிப்படுத்தினார்.

பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தன் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் பல விடயங்கள் இருப்பதாக குறித்த குரல் பதிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயத்தை நிராகரித்து இன்று நாடாளுமன்றில் கருத்துரைத்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் சிறந்த முறையில் நீதியை நிலைநாட்டியுள்ளதாக தெரிவித்தார்.

பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 79 சந்தேகநபர்களுக்கு எதிராக 42 குற்றப்பத்திரங்கள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயற்பாடுகள் பாகுபாடின்றி சுயாதீனமான முறையில் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.


ஹன்சீர் அஷாத் மௌலானா என்ற நபர் செனல் 4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்தாத குரல்பதிவு, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ளதுடன் அவர் அதனை நாடாளுமன்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்படியானால் ஹன்சீர் அஷாத் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு விசேட குரல்பதிவை அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ள சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பிள்ளையான் தொடர்பில் சாணக்கியன் வெளிப்படுத்திய சர்ச்சை குரல் பதிவு - நீதியமைச்சர் வெளியிட்ட தகவல். samugammedia ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருப்பின் அதனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் வலியுறுத்தியுள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 ஆவணப்படத்தின் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானாவின் குரல் பதிவு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய தினம் நாடாளுமன்றில் வெளிப்படுத்தினார்.பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தன் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் பல விடயங்கள் இருப்பதாக குறித்த குரல் பதிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்தநிலையில், குறித்த விடயத்தை நிராகரித்து இன்று நாடாளுமன்றில் கருத்துரைத்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் சிறந்த முறையில் நீதியை நிலைநாட்டியுள்ளதாக தெரிவித்தார்.பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 79 சந்தேகநபர்களுக்கு எதிராக 42 குற்றப்பத்திரங்கள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த செயற்பாடுகள் பாகுபாடின்றி சுயாதீனமான முறையில் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.ஹன்சீர் அஷாத் மௌலானா என்ற நபர் செனல் 4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்தாத குரல்பதிவு, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ளதுடன் அவர் அதனை நாடாளுமன்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.அப்படியானால் ஹன்சீர் அஷாத் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு விசேட குரல்பதிவை அனுப்பியுள்ளார்.இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ள சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement