• May 25 2025

பூநகரியில் சட்டவிரோத கடைகளை அகற்ற முற்பட்டபோது ஏற்பட்ட குழப்பம்..!

Sharmi / May 24th 2025, 11:15 pm
image

பூநகரி முழங்காவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச காணிக்குள் அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு பூநகரி பிரதேச சபை செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது அவ்விடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் அங்கிருந்தவர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றது.

இதன்போது அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும்  கடை உரிமையாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இதன்போது பிரதேச சபை உத்தியோகத்தர் அநாகரிகமான முறையில் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவதை புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை பிரதேச சபை அதிகாரி ஒருவர் தாக்க முற்பட்டதுடன் கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் பிரதேசசபை செயலர் சட்டவிரோத கட்டுமானங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.

அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.



பூநகரியில் சட்டவிரோத கடைகளை அகற்ற முற்பட்டபோது ஏற்பட்ட குழப்பம். பூநகரி முழங்காவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச காணிக்குள் அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு பூநகரி பிரதேச சபை செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது அவ்விடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் அங்கிருந்தவர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கமும் இடம்பெற்றது.இதன்போது அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும்  கடை உரிமையாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இதன்போது பிரதேச சபை உத்தியோகத்தர் அநாகரிகமான முறையில் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.அதேவேளை சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவதை புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை பிரதேச சபை அதிகாரி ஒருவர் தாக்க முற்பட்டதுடன் கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்நிலையில் பிரதேசசபை செயலர் சட்டவிரோத கட்டுமானங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement