• Nov 23 2024

தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்

Chithra / Dec 12th 2023, 12:45 pm
image

 இலங்கையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விரைவில் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களளையும் அவர்களது படகுகளையும் திருப்பி அனுப்புவதற்கான அவசர நடவடிக்கைகளைத் தொடங்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களும், காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 பேரும் டிசம்பர் 9ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

இதேவேளை  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 13 பேரை விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி நாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்  இலங்கையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை விரைவில் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களளையும் அவர்களது படகுகளையும் திருப்பி அனுப்புவதற்கான அவசர நடவடிக்கைகளைத் தொடங்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களும், காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 பேரும் டிசம்பர் 9ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதேவேளை  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 13 பேரை விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை புதுச்சேரியின் முதல்வர் என்.ரங்கசாமி நாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement