• Sep 21 2024

சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த குழந்தை - வைத்தியசாலை விளக்கம் samugammedia

Chithra / Aug 2nd 2023, 1:32 pm
image

Advertisement

பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து அண்மையில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படும் குழந்தையின் மரணத்துக்கு சரீரத்தில் ஏற்பட்ட கிறுமித்தொற்றே காரணமென அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், சிகிச்சைக்கு முன்னதான சகல பரிசோதனைகளும் உயிரிழந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் இடதுபக்க சிறுநீரகம் பெரிதாகி, ஒழுங்கற்ற விதத்தில் இருந்தமை பரிசோதனைகளில் உறுதியாகியிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டரை வயது குழந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

சம்பந்தப்பட்ட சகல பரிசோதனைகளையும் முறையாக செய்ததன் பின்னரே கடந்த டிசம்பர் மாதம் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும்போதும், உயிரிழந்த குழந்தையின் இடதுபக்க சிறுநீரகம் பெரிதாகி, ஒழுங்கற்ற விதத்தில் இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அந்த சத்திர சிகிச்சை இடம்பெறும் சத்திர சிகிச்சை மத்திய நிலையத்திலும் தனியான ஸ்கேன் இயந்திரமொன்றை கொண்டுவந்ததன் பின்னரே, இந்த ஸ்கேன் பரிசோதனைகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஸ்கேன் பரிசோதனையை தொடர்ந்து சிரேஷ்ட வைத்தியரொருவருக்கும் அழைப்பு விடுத்து இரண்டாம் நிலைப்பாடொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதனடிப்படையிலேயே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் செயலிழந்திருந்த சிறுநீரகத்துடன் வலதுபுற சிறுநீரகமும் இணைந்தே இருந்திருக்கிறது. 

அதனால், அந்த வைத்தியருக்கு இதுதொடர்பில் விசேட பரிசோதனையொன்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்க வில்லை. பரிசோதனைகளிலும் அது தென்படாது.

இந்த சத்திர சிகிச்சைக்கு முறையான பரிசோதனைகள் வைத்தியசாலையினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, இரு சிறுநீரகமும் இணைந்திருந்ததால் பாதிப்படைந்திருந்த சிறுநீரகத்தை நீக்கும்போது மற்றைய சிறுநீரகமும் விலகியிருக்குமென்றே நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

இந்நிலையில், இன்னுமொரு சிறுநீரகத்தை பொருத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், குழந்தையின் சரீரத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்மையில் குறித்த குழந்தை உயிரிழந்திருந்தது.

இவ்வாறிருக்கையில், சுகாதாரத்துறையில் இருப்பவர்களே குழந்தையின் சிகிச்சை தொடர்பில் முன்னைய பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.

இயந்திரங்கள் இருக்கவில்லை என்ற அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள். இந்த குற்றச்சாட்டுகள் முழுமையான தவறான விடயமாகும். சகல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது என்பதை குழந்தையின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.


சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த குழந்தை - வைத்தியசாலை விளக்கம் samugammedia பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து அண்மையில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படும் குழந்தையின் மரணத்துக்கு சரீரத்தில் ஏற்பட்ட கிறுமித்தொற்றே காரணமென அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், சிகிச்சைக்கு முன்னதான சகல பரிசோதனைகளும் உயிரிழந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் இடதுபக்க சிறுநீரகம் பெரிதாகி, ஒழுங்கற்ற விதத்தில் இருந்தமை பரிசோதனைகளில் உறுதியாகியிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டரை வயது குழந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட சகல பரிசோதனைகளையும் முறையாக செய்ததன் பின்னரே கடந்த டிசம்பர் மாதம் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும்போதும், உயிரிழந்த குழந்தையின் இடதுபக்க சிறுநீரகம் பெரிதாகி, ஒழுங்கற்ற விதத்தில் இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அந்த சத்திர சிகிச்சை இடம்பெறும் சத்திர சிகிச்சை மத்திய நிலையத்திலும் தனியான ஸ்கேன் இயந்திரமொன்றை கொண்டுவந்ததன் பின்னரே, இந்த ஸ்கேன் பரிசோதனைகள் இடம்பெற்றிருக்கின்றன.ஸ்கேன் பரிசோதனையை தொடர்ந்து சிரேஷ்ட வைத்தியரொருவருக்கும் அழைப்பு விடுத்து இரண்டாம் நிலைப்பாடொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் செயலிழந்திருந்த சிறுநீரகத்துடன் வலதுபுற சிறுநீரகமும் இணைந்தே இருந்திருக்கிறது. அதனால், அந்த வைத்தியருக்கு இதுதொடர்பில் விசேட பரிசோதனையொன்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்க வில்லை. பரிசோதனைகளிலும் அது தென்படாது.இந்த சத்திர சிகிச்சைக்கு முறையான பரிசோதனைகள் வைத்தியசாலையினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, இரு சிறுநீரகமும் இணைந்திருந்ததால் பாதிப்படைந்திருந்த சிறுநீரகத்தை நீக்கும்போது மற்றைய சிறுநீரகமும் விலகியிருக்குமென்றே நாங்கள் முடிவு செய்திருந்தோம்.இந்நிலையில், இன்னுமொரு சிறுநீரகத்தை பொருத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், குழந்தையின் சரீரத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்மையில் குறித்த குழந்தை உயிரிழந்திருந்தது.இவ்வாறிருக்கையில், சுகாதாரத்துறையில் இருப்பவர்களே குழந்தையின் சிகிச்சை தொடர்பில் முன்னைய பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.இயந்திரங்கள் இருக்கவில்லை என்ற அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள். இந்த குற்றச்சாட்டுகள் முழுமையான தவறான விடயமாகும். சகல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது என்பதை குழந்தையின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement