கனடாவில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட சொக்லேட்டில் ஊசிகள் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ், கொலம்பியா மாகாணத்தின் மேலும் இரண்டு நகரங்களில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த சொக்லேட்டில் தையல் ஊசிகள் இருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கம்லூப்ஸ் (Kamloops) மற்றும் ராஸ்லேண்ட் (Rossland) நகரங்களில் சமீபத்தில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆறு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஒரு சிறிய கிட்கேட் (KitKat) சொக்லேட்டில் ஒரு ஊசி குத்தியிருப்பது போன்ற புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சொக்லேட்டில் தவறுதலாக தையல் பொருட்களுடன் கலந்து போயிருக்கலாம் என்றும், அதில் நூல் (thread) இணைந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகளுக்கு ஆசையாய் சொக்லேட் வாங்கி கொடுத்தவருக்கு அதிர்ச்சி கனடாவில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட சொக்லேட்டில் ஊசிகள் காணப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ், கொலம்பியா மாகாணத்தின் மேலும் இரண்டு நகரங்களில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த சொக்லேட்டில் தையல் ஊசிகள் இருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கம்லூப்ஸ் (Kamloops) மற்றும் ராஸ்லேண்ட் (Rossland) நகரங்களில் சமீபத்தில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆறு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிட்கேட் (KitKat) சொக்லேட்டில் ஒரு ஊசி குத்தியிருப்பது போன்ற புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த சொக்லேட்டில் தவறுதலாக தையல் பொருட்களுடன் கலந்து போயிருக்கலாம் என்றும், அதில் நூல் (thread) இணைந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.