• May 21 2024

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா - இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திட்டம்!samugammedia

Sharmi / Apr 8th 2023, 11:09 pm
image

Advertisement

இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை அண்மித்த பகுதியில் இந்த திட்டம் நிறுவப்படவுள்ளது.

தேவேந்திர முனையில் இருந்து தென்மேற்கே 1700 கிலோ மீற்றர் மீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறன் உத்தேச ரேடாருக்கு இருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கையின் படி, ரேடார் அமைப்பு சீனாவால் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், அது முன்மொழியப்பட்ட ரேடார் வரம்பிற்குள் உள்ள இந்திய இராணுவ மையங்களை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா - இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திட்டம்samugammedia இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை அண்மித்த பகுதியில் இந்த திட்டம் நிறுவப்படவுள்ளது.தேவேந்திர முனையில் இருந்து தென்மேற்கே 1700 கிலோ மீற்றர் மீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறன் உத்தேச ரேடாருக்கு இருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.அறிக்கையின் படி, ரேடார் அமைப்பு சீனாவால் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், அது முன்மொழியப்பட்ட ரேடார் வரம்பிற்குள் உள்ள இந்திய இராணுவ மையங்களை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement