இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்க தயார் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது.
எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை.
இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது.
எப்போதும் போல இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையின் ஆயுதப்படையினருக்கும் மக்களிற்கும் சீன மக்களும் இராணுவத்தினரும் உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இலங்கைங்கு இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ள சீனா. இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்க தயார் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது.எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை.இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. எப்போதும் போல இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையின் ஆயுதப்படையினருக்கும் மக்களிற்கும் சீன மக்களும் இராணுவத்தினரும் உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.