• Oct 28 2024

விண்வெளி மையத்துக்கு 30ஆவது முறையாக மனிதர்களை அனுப்பிய சீனா! samugammedia

Tamil nila / Oct 26th 2023, 3:29 pm
image

Advertisement

சீனா விண்வெளியில் தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி மையத்தை அமைத்து வரும் நிலையில் அதை மேம்படுத்த இன்று விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்புகிறது.

சீனா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 30ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உருவாக்கி வைத்திருக்கும் விண்வெளி ஆய்வு மையம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுடன் மீளுருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இதனைமுன்னிட்டு தங்களுக்கு தனி மையத்தை உருவாக்க ரஷ்யாவும், சீனாவும் தீவிரமாக போட்டி போட்டு வேலை செய்து வருகின்றன.

இதனை அடிப்படையாக வைத்தே தற்போது சீனா விண்வெளி ஆய்வு மையம் தனக்கான மூன்று விண்வெளி வீரர்கள் கொண்ட ஸ்பேஷ் ஸ்டேஷனை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இன்று காலை விண்ணுக்கு ஏவப்பட்ட ஷென்சோ - 17 விண்கலம், வெற்றிகரமாக தன்னுடைய ஸ்பேஷ் ஸ்டேஷனை அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரை சீனாவின் சார்பாக 29 முறைகள் சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

குறித்த விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் சுமார் 6 மாத காலம் வரை அங்கேயே இருந்து, தங்களின் விண்வெளி மையமான தியாங்காங்-ஐ மேம்படுத்துவார்கள்.

மேலும், சில ஆய்வுகளையும் மேற்கொள்வார்கள். இறுதியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மங்கோலியாவுக்கு அருகே இவர்கள் தரையிறங்குவார்கள்.

இந்த மிஷன் இந்தியாவுக்கான சவாலை மேலும் அதிகரித்திருக்கிறது

சீனாவும் இந்தியாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை பெற்றது.

ஆனால், இரு நாடுகளும் கடந்து வந்த பாதையில் ஏராளமான மாற்றங்கள் நடந்திருக்கிறது. பொருளாதாரமாக இருந்தாலும் சரி, மனிதவள குறியீடாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் முந்தியிருப்பது என்னவோ சீனாதான்!

ஆனாலும், சூரியனுக்கும் நிலவின் தென் துருவத்துக்கும் விண்கலத்தை ஒரே நாடு இந்தியாவே ஆகும்.

தற்போது, இந்தியாவிலிருந்து பல விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், முதல் ஆளில்லா விண்கலம் “ககன்யான்” அண்மையில் ஏவப்பட்டது.

அதாவது, ககன்யான் திட்டத்தின் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் பயணிப்பவர்கள் எப்படி தப்பிக்க வேண்டும் ?என்ற முறைமை சரியாக வேலை செய்கிறதா? என்பதை தான் இஸ்ரோ ஆய்வு மையம் முதல்முறையாக சோதனை செய்து பார்த்தது.

இதனடிப்படையில், இந்தியாவின் முதல் முயற்சிக்கும் சீனாவின் 30ஆவது முயற்சிக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதால் சீனா வெகுவிரைவில் தனக்காக ஒரு ஸ்பேஷ் ஸ்டேஷனை உருவாக்கும் எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தியா, மனிதர்களை சொந்தமாக விண்வெளிக்கு அனுப்ப 2025ஆம் ஆண்டு வரை ஆகும் எனவும் அண்மையில் அறிவித்திருந்தது.

அதேபோல இந்தியா சொந்தமாக விண்வெளி மையத்தை உருவாக்க நீண்ட காலம் ஆகும். அதற்குள் விண்வெளியையும் சீனா ஆக்கிரமித்து விடுமோ? என்கிற அச்சம் மேலெழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி மையத்துக்கு 30ஆவது முறையாக மனிதர்களை அனுப்பிய சீனா samugammedia சீனா விண்வெளியில் தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி மையத்தை அமைத்து வரும் நிலையில் அதை மேம்படுத்த இன்று விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்புகிறது.சீனா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 30ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உருவாக்கி வைத்திருக்கும் விண்வெளி ஆய்வு மையம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுடன் மீளுருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.இதனைமுன்னிட்டு தங்களுக்கு தனி மையத்தை உருவாக்க ரஷ்யாவும், சீனாவும் தீவிரமாக போட்டி போட்டு வேலை செய்து வருகின்றன.இதனை அடிப்படையாக வைத்தே தற்போது சீனா விண்வெளி ஆய்வு மையம் தனக்கான மூன்று விண்வெளி வீரர்கள் கொண்ட ஸ்பேஷ் ஸ்டேஷனை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.இன்று காலை விண்ணுக்கு ஏவப்பட்ட ஷென்சோ - 17 விண்கலம், வெற்றிகரமாக தன்னுடைய ஸ்பேஷ் ஸ்டேஷனை அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதுவரை சீனாவின் சார்பாக 29 முறைகள் சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.குறித்த விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் சுமார் 6 மாத காலம் வரை அங்கேயே இருந்து, தங்களின் விண்வெளி மையமான தியாங்காங்-ஐ மேம்படுத்துவார்கள்.மேலும், சில ஆய்வுகளையும் மேற்கொள்வார்கள். இறுதியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மங்கோலியாவுக்கு அருகே இவர்கள் தரையிறங்குவார்கள்.இந்த மிஷன் இந்தியாவுக்கான சவாலை மேலும் அதிகரித்திருக்கிறதுசீனாவும் இந்தியாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் விடுதலை பெற்றது.ஆனால், இரு நாடுகளும் கடந்து வந்த பாதையில் ஏராளமான மாற்றங்கள் நடந்திருக்கிறது. பொருளாதாரமாக இருந்தாலும் சரி, மனிதவள குறியீடாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் முந்தியிருப்பது என்னவோ சீனாதான்ஆனாலும், சூரியனுக்கும் நிலவின் தென் துருவத்துக்கும் விண்கலத்தை ஒரே நாடு இந்தியாவே ஆகும்.தற்போது, இந்தியாவிலிருந்து பல விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இதனடிப்படையில், முதல் ஆளில்லா விண்கலம் “ககன்யான்” அண்மையில் ஏவப்பட்டது.அதாவது, ககன்யான் திட்டத்தின் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் பயணிப்பவர்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்ற முறைமை சரியாக வேலை செய்கிறதா என்பதை தான் இஸ்ரோ ஆய்வு மையம் முதல்முறையாக சோதனை செய்து பார்த்தது.இதனடிப்படையில், இந்தியாவின் முதல் முயற்சிக்கும் சீனாவின் 30ஆவது முயற்சிக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதால் சீனா வெகுவிரைவில் தனக்காக ஒரு ஸ்பேஷ் ஸ்டேஷனை உருவாக்கும் எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் இந்தியா, மனிதர்களை சொந்தமாக விண்வெளிக்கு அனுப்ப 2025ஆம் ஆண்டு வரை ஆகும் எனவும் அண்மையில் அறிவித்திருந்தது.அதேபோல இந்தியா சொந்தமாக விண்வெளி மையத்தை உருவாக்க நீண்ட காலம் ஆகும். அதற்குள் விண்வெளியையும் சீனா ஆக்கிரமித்து விடுமோ என்கிற அச்சம் மேலெழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement