• Apr 30 2024

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு!

Tamil nila / Dec 19th 2022, 6:36 am
image

Advertisement

சீனாவும் இலங்கையும் நல்ல நண்பர்கள் என்றும், இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.


சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இலங்கையும் சீனாவும் பொதுவான அபிவிருத்திக்கான நல்ல பங்காளிகள் என்றும் இருதரப்பும் உதவும் சகோதரர்கள் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் அரிசி உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இரு தரப்பும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இறப்பர்-அரிசி ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டு கையெழுத்தானது மற்றும் இந்த இறப்பர்-அரிசி ஒப்பந்தம் சீனா மீது மேற்கத்தய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை அடுத்து கையெழுத்திடப்பட்டது.


இதன் மூலம் சீனாவும் இலங்கையும் பயனடைந்ததுடன், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் பங்களித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.


இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு சீனாவும் இலங்கையும் நல்ல நண்பர்கள் என்றும், இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கையும் சீனாவும் பொதுவான அபிவிருத்திக்கான நல்ல பங்காளிகள் என்றும் இருதரப்பும் உதவும் சகோதரர்கள் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் அரிசி உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இரு தரப்பும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இறப்பர்-அரிசி ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டு கையெழுத்தானது மற்றும் இந்த இறப்பர்-அரிசி ஒப்பந்தம் சீனா மீது மேற்கத்தய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை அடுத்து கையெழுத்திடப்பட்டது.இதன் மூலம் சீனாவும் இலங்கையும் பயனடைந்ததுடன், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் பங்களித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement