சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சர் வாங் வென்டாவோ, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரியின் காரணமாக பல்வேறு நாடுகள் வர்த்தக ரீதியான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.
எனினும் அவரின் வருகைக்கான திகதி மற்றும் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக இன்னும் திட்டமிடப்படவில்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க சீனாவுக்கு சென்றிருந்தபோது, இலங்கை- சீனா இடையிலான வர்த்தக உடன்படிக்கையை விரைவுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சீனாவின் வர்த்தகத் துறை அமைச்சர் நாட்டுக்கு வருகைதரும் போது, இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீனாவின் வர்த்தக அமைச்சர். சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சர் வாங் வென்டாவோ, எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரியின் காரணமாக பல்வேறு நாடுகள் வர்த்தக ரீதியான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.எனினும் அவரின் வருகைக்கான திகதி மற்றும் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக இன்னும் திட்டமிடப்படவில்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க சீனாவுக்கு சென்றிருந்தபோது, இலங்கை- சீனா இடையிலான வர்த்தக உடன்படிக்கையை விரைவுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.இந்தநிலையில், சீனாவின் வர்த்தகத் துறை அமைச்சர் நாட்டுக்கு வருகைதரும் போது, இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.