• Apr 29 2025

மத்திய மலைநாட்டில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு..!

Sharmi / Apr 29th 2025, 9:06 am
image

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக  நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ் சாலை நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 33 அடி நீர் குறைந்துள்ளது.

அதன் காரணமாக 1969 ம் ஆண்டு நீரில் மூழ்கிய மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த விகாரையில் இருந்த புனித புத்தர் சிலை கங்குவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன தற்போது மக்கள் சென்று வழிபட முடியும்.

மேலும் இந்த நிலை தோன்றும் பட்சத்தில் இந்த பகுதிக்கு அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சென்று பார்வை இட வாய்ப்புள்ளது.

தற்போது காலை வேளையில் கடும் வெப்பம் நிலவிவருகிறது.

மாலை வேளையில் கனத்த மழை பெய்தது வருகிறது.

இதன் காரணமாக இந்த நீர் தேக்க பகுதிக்கு செல்லும் மக்கள் சகதி நிறைந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மத்திய மலைநாட்டில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக  நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக மவுஸ் சாலை நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 33 அடி நீர் குறைந்துள்ளது.அதன் காரணமாக 1969 ம் ஆண்டு நீரில் மூழ்கிய மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த விகாரையில் இருந்த புனித புத்தர் சிலை கங்குவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன தற்போது மக்கள் சென்று வழிபட முடியும்.மேலும் இந்த நிலை தோன்றும் பட்சத்தில் இந்த பகுதிக்கு அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சென்று பார்வை இட வாய்ப்புள்ளது.தற்போது காலை வேளையில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மாலை வேளையில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக இந்த நீர் தேக்க பகுதிக்கு செல்லும் மக்கள் சகதி நிறைந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement