• Nov 26 2024

செவ்வாய் கிரகத்தில் பாலைவனப் பாசி வளர்ப்பு- சீனா ஆராய்ச்சி குழு கண்டுபிடிப்பு!

Tamil nila / Jul 7th 2024, 7:35 am
image

கடுமையான வறட்சி மற்றும் குளிரைத் தாங்கும் ஒரு வகை பாலைவனப் பாசியை செவ்வாய் கிரகத்தில் வளர்க்கலாம் என்று சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த பாசிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட காலநிலையையும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வரை குளிரான வெப்பநிலையையும் தாங்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய புதிய ஆய்வின்படி, செவ்வாய் கிரகத்தில் வாழும் இந்த வகை பாசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் வறட்சியையும் குளிரையும் தாங்கக்கூடிய பாலைவனப் பாசி வகையை சிவப்பு கிரகம் அல்லது செவ்வாய் கிரகத்தில் பயிரிடலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

திபெத்திய பீடபூமி, மொஜாவே பாலைவனம் மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்களில் இந்த வகைப் பாசிகள் பல ஆண்டுகள் உயிர்வாழும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த வகை பாசி சின்ட்ரிச்சியா கேனினெர்விஸ் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பாசிகள் தண்ணீரின்றி வாழ முடியாது, ஆனால் இந்த பாசி தண்ணீர் இல்லாமல் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ முடியும்.

சிறிதளவு தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம், இந்த பாசிகள் உயிர்பெற்று ஒளிச்சேர்க்கையை "வினாடிகளில்" தொடங்குகின்றன, இது எந்த கிரகத்திலும் மனிதன் உயிர்வாழ பயன்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாசியானது கதிர்வீச்சை எதிர்க்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் பாலைவனப் பாசி வளர்ப்பு- சீனா ஆராய்ச்சி குழு கண்டுபிடிப்பு கடுமையான வறட்சி மற்றும் குளிரைத் தாங்கும் ஒரு வகை பாலைவனப் பாசியை செவ்வாய் கிரகத்தில் வளர்க்கலாம் என்று சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.இந்த பாசிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட காலநிலையையும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வரை குளிரான வெப்பநிலையையும் தாங்கும் என்று கூறப்படுகிறது.சீனாவின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய புதிய ஆய்வின்படி, செவ்வாய் கிரகத்தில் வாழும் இந்த வகை பாசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் கடும் வறட்சியையும் குளிரையும் தாங்கக்கூடிய பாலைவனப் பாசி வகையை சிவப்பு கிரகம் அல்லது செவ்வாய் கிரகத்தில் பயிரிடலாம் என கண்டறியப்பட்டுள்ளது.திபெத்திய பீடபூமி, மொஜாவே பாலைவனம் மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்களில் இந்த வகைப் பாசிகள் பல ஆண்டுகள் உயிர்வாழும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த வகை பாசி சின்ட்ரிச்சியா கேனினெர்விஸ் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பாசிகள் தண்ணீரின்றி வாழ முடியாது, ஆனால் இந்த பாசி தண்ணீர் இல்லாமல் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ முடியும்.சிறிதளவு தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம், இந்த பாசிகள் உயிர்பெற்று ஒளிச்சேர்க்கையை "வினாடிகளில்" தொடங்குகின்றன, இது எந்த கிரகத்திலும் மனிதன் உயிர்வாழ பயன்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த பாசியானது கதிர்வீச்சை எதிர்க்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement