• Apr 26 2025

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற நால்வர் உயிரிழப்பு

Chithra / Apr 25th 2025, 6:46 pm
image

 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்துக்கொள்ளவதற்காக சென்று சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 69, 70, 74 மற்றும் 80 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

ஏனைய மூவரின் உயிரிழப்புக்கான காரணங்கள் கண்டறிப்படவில்லை என்பதால் அவர்களின் உடல் பாகங்கள் தடயவியல் நோயியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், கடந்த ஏழு நாட்களில் சுமார் 300 பேர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு மற்றும் வெப்பம் காரணமாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் 9 சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் அவற்றில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்ளும் யாத்தியர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக  07 அம்பியூலன்ஸ்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற நால்வர் உயிரிழப்பு  கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்துக்கொள்ளவதற்காக சென்று சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் 69, 70, 74 மற்றும் 80 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஏனைய மூவரின் உயிரிழப்புக்கான காரணங்கள் கண்டறிப்படவில்லை என்பதால் அவர்களின் உடல் பாகங்கள் தடயவியல் நோயியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கடந்த ஏழு நாட்களில் சுமார் 300 பேர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு மற்றும் வெப்பம் காரணமாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் 9 சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் அவற்றில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்ளும் யாத்தியர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக  07 அம்பியூலன்ஸ்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement