• May 17 2024

நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள்!

Chithra / Dec 25th 2022, 12:35 pm
image

Advertisement

உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று கொண்டாடும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுப்பட்டனர். இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12  மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.நீராடி புத்தாடைகளை அனிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.ஆலய அருட்தந்தை பயார்ஸ் கெனடி பெர்னாண்டோவின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.







-

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ்  விசேட நல்லிரவு ஆராதனை (25) இடம்பெற்றது. 

அருட் தந்தை கயான் பிரசாந்த தலைமையில் நடைபெற்ற இந்த நல்லிரவு ஆராதனையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


-

மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி  மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.  

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர், அருட்தந்தையர்கள்,    இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

மேலும் இந்த காலகட்டத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.

விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளிலே ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

இயேசுநாதர் பிறந்தது ஒரு மாட்டு தொழுவத்தில். அவர் பிறக்கும் போது அவருக்கு பெரிய மாளிகை இருக்கவில்லை. ஒரு பெரிய வீட்டில் கூட அவர் பிறக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழையாகத்தான் அவர் பிறந்தார்.

ஆகையால் தான் அவர் ஏழைகளுக்கும் வரியோருக்கும் ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின்  பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். என  ஆயர் தனது உரையில் தெரிவித்தார்.

திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில்  பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.

அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-

கிளிநொச்சியில் நாத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன. நாட்டில் உள்ள அரசியல் பொருளாதார ஸ்தம்பி தங்கள் அகன்று, நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என மக்கள் மன்றாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையில் வணக்கத்துக்குரிய கர்த்தரின் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.


நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று கொண்டாடும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுப்பட்டனர். இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12  மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.நீராடி புத்தாடைகளை அனிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.ஆலய அருட்தந்தை பயார்ஸ் கெனடி பெர்னாண்டோவின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.-நீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ்  விசேட நல்லிரவு ஆராதனை (25) இடம்பெற்றது. அருட் தந்தை கயான் பிரசாந்த தலைமையில் நடைபெற்ற இந்த நல்லிரவு ஆராதனையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.-மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி  மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர், அருட்தந்தையர்கள்,    இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.மேலும் இந்த காலகட்டத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளிலே ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.இயேசுநாதர் பிறந்தது ஒரு மாட்டு தொழுவத்தில். அவர் பிறக்கும் போது அவருக்கு பெரிய மாளிகை இருக்கவில்லை. ஒரு பெரிய வீட்டில் கூட அவர் பிறக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழையாகத்தான் அவர் பிறந்தார்.ஆகையால் தான் அவர் ஏழைகளுக்கும் வரியோருக்கும் ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின்  பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். என  ஆயர் தனது உரையில் தெரிவித்தார்.திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில்  பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-கிளிநொச்சியில் நாத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன. நாட்டில் உள்ள அரசியல் பொருளாதார ஸ்தம்பி தங்கள் அகன்று, நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என மக்கள் மன்றாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையில் வணக்கத்துக்குரிய கர்த்தரின் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement