• Apr 03 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்..!!

Tamil nila / Mar 31st 2024, 7:54 pm
image

கல்முனை  இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றினை  இன்று (31) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டமானது  வணக்கத்திற்குரிய போதகர் கிருபைராஜா  தலைமையில் இன்று மாலை   இடம்பெற்றதுடன்   எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதேவேளை குறித்த போராட்டத்திற்கு  பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருபலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம். கல்முனை  இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றினை  இன்று (31) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.இக்கவனயீர்ப்பு போராட்டமானது  வணக்கத்திற்குரிய போதகர் கிருபைராஜா  தலைமையில் இன்று மாலை   இடம்பெற்றதுடன்   எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதேவேளை குறித்த போராட்டத்திற்கு  பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுமேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருபலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement