புத்தளம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று(25) நத்தார் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நத்தார் பண்டிகைகான நள்ளிரவு ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதேவேளை சிலாபம் மறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த முந்தல்-கட்டைக்காடு புனித சவோரியார் தேவாலயத்திலும் தலவில் புனித அன்னமாள் தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களிலும் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை நள்ளிரவு ஆராதனையும் திருப்பலி பூஜையும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது நள்ளிரவு ஆதாரதனையில் அதிகளவிலான விசுவாசிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்ற தேவாலயங்களில் பொலிஸாரும் கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் களைகட்டிய நத்தார் பண்டிகை; பாதுகாப்பும் தீவிரம். புத்தளம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று(25) நத்தார் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த வகையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நத்தார் பண்டிகைகான நள்ளிரவு ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.இதேவேளை சிலாபம் மறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த முந்தல்-கட்டைக்காடு புனித சவோரியார் தேவாலயத்திலும் தலவில் புனித அன்னமாள் தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களிலும் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை நள்ளிரவு ஆராதனையும் திருப்பலி பூஜையும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.இதன் போது நள்ளிரவு ஆதாரதனையில் அதிகளவிலான விசுவாசிகள் கலந்து கொண்டு இருந்தனர்.புத்தளம் மாவட்டத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்ற தேவாலயங்களில் பொலிஸாரும் கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.