நாடளாவீய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம், வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று (09) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்களினால் பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் துப்பரவு செய்யப்பட்டமையுடன் வவுனியா மாநகர சபையின் ஒத்துழைப்புடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.
இச் செயற்றிட்டத்தில் மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தில் ஞாபகார்த்த மரத்தினை நாட்டி வைத்தமையுடன் மாநகர சபை உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.
வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாடளாவீய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம், வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று (09) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்களினால் பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் துப்பரவு செய்யப்பட்டமையுடன் வவுனியா மாநகர சபையின் ஒத்துழைப்புடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.இச் செயற்றிட்டத்தில் மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தில் ஞாபகார்த்த மரத்தினை நாட்டி வைத்தமையுடன் மாநகர சபை உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.