கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், திருகோணமலை ஆளுநர் செயலகத்தின் முன்பாகவுள்ள கரையோரப்பகுதி இன்றையதினம்(01) சுத்தம் செய்யப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த கரையோர பகுதி சிரமதான நிகழ்வாக இடம்பெற்றது.
இதில் கடற்கரையோரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சூழல் மாசடையாத வண்ணம் சுத்தம் செய்யப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் என அனைத்தும் அகற்றப்பட்டன.
இதில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ் அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ எம் ஜி ஹேமந்த குமார உட்பட மாகாண சபைக்குட்பட்ட திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு ஆளுநர் தலைமையில் திருமலையில் கிளீன் சிறீலங்கா திட்டம் முன்னெடுப்பு. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், திருகோணமலை ஆளுநர் செயலகத்தின் முன்பாகவுள்ள கரையோரப்பகுதி இன்றையதினம்(01) சுத்தம் செய்யப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த கரையோர பகுதி சிரமதான நிகழ்வாக இடம்பெற்றது. இதில் கடற்கரையோரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சூழல் மாசடையாத வண்ணம் சுத்தம் செய்யப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் என அனைத்தும் அகற்றப்பட்டன. இதில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ் அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ எம் ஜி ஹேமந்த குமார உட்பட மாகாண சபைக்குட்பட்ட திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.