• May 01 2024

கடும் பாதுகாப்பில் கொழும்பு - களமிறக்கப்பட்டுள்ள 100 புலனாய்வு பிரிவு அதிகாரிகள்..!

Chithra / Apr 5th 2024, 10:52 am
image

Advertisement

 

மேல் மாகாணத்தில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, கொழும்பில் பொது பணிகளுக்காக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை நியமிக்குமாறு காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக, நாடளாவிய ரீதியில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தின் போதும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். 

கடும் பாதுகாப்பில் கொழும்பு - களமிறக்கப்பட்டுள்ள 100 புலனாய்வு பிரிவு அதிகாரிகள்.  மேல் மாகாணத்தில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்காக, கொழும்பில் பொது பணிகளுக்காக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை நியமிக்குமாறு காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.கடந்த சில வாரங்களாக, நாடளாவிய ரீதியில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தின் போதும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement